“ஜோ ரூட்டை பற்றி யாரும் கவலை வேணாம்.. பாஸ்பால் தொடரும்” – மெக்கலம் உறுதியான பேச்சு

0
162
Root

இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி வழக்கம் போல் அதிரடியாக விளையாடி முதல் டெஸ்ட் போட்டியை வென்று எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது.

இந்திய மண்ணில் இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதை இங்கிலாந்து மக்கள் அங்கு மிகவும் ஆச்சரியமாகவும், சாதனையாகவும் பார்க்கிறார்கள் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கூறியிருந்தார்கள்.

- Advertisement -

இப்படியான நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங்கில் சரிவர விளையாட முடியாமல் தோல்வி அடைந்திருக்கிறது. இங்கிலாந்து அணியில் ஜாக் கிரவுலி தவிர வேறு யாரும் அரை சதம் இரண்டு இன்னிங்ஸிலும் அடிக்கவில்லை.

மேலும் நடந்து முடிந்திருக்கின்ற இரண்டு போட்டியிலும் சேர்த்து இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் மொத்தம் 52 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். இதில் இரண்டு முறை ரவிச்சந்திரன் அஸ்வின் இடமும், இரண்டு முறை பும்ரா இடமும் அவர் ஆட்டம் இழந்திருக்கிறார்.

அவர் ரன்கள் குதிக்கவில்லை என்பதை தாண்டி, அவர் ஆட்டம் இழக்கும் விதம் குறித்து நிறைய விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக அவர் பாஸ் பால் முறையில் அதிரடியாக விளையாட முற்பட்டு விக்கெட்டை கடைசியாகக் கொடுத்தார்.

- Advertisement -

இதன் காரணமாக இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் பாஸ்பால் அணுகுமுறை இங்கிலாந்தின் மிகச்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் ஜோ ரூட்டின் பேட்டிங்கை கெடுத்து வீணாக்கி விட்டதாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

தற்பொழுது இது குறித்து பேசியுள்ள இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலம் “இன்னும் மூன்று டெஸ்ட் போட்டிகள் இருக்கின்றன. ஜோ ரூட்டால் இன்னும் டன் கணக்கில் ரன்கள் அடிக்க முடியும். அவர் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன். இதுவரை இங்கிலாந்து கண்டதிலேயே மிகச் சிறந்த பேட்ஸ்மேன்.

மக்கள் பொதுவாக அவர் எப்படி ஆட்டம் இழந்தார் என்றுதான் பார்ப்பார்கள். ஆனால் அவர் என்ன மாதிரி ஆப்ஷன் எடுக்கிறார் என்று பார்க்க வேண்டும். அவர் ஃபீல்ட் செட்டப்பிற்கு தகுந்தவாறு விளையாட முயற்சி செய்தார். அவரால் ரன்களை கறக்க முடியும்.

இதையும் படிங்க : இந்தியா vs ஜிம்பாப்வே.. 5 மேட்ச் டி20 சீரிஸ்.. போட்டி அட்டவணை வெளியீடு

நீங்கள் சில சமயங்களில் உங்கள் தைரியத்தை காட்ட வேண்டும். சில நேரங்களில் அதன் மூலமாக வெளியே வருவீர்கள். இப்படித்தான் ஆட்டம் உருண்டு கொண்டே இருக்கும். எங்கள் பார்வையில் எங்கள் பாஸ்பால் அணுகுமுறையில் எந்த மாற்றமும் கிடையாது” என்று கூறியிருக்கிறார்.