இந்தியா vs ஜிம்பாப்வே.. 5 மேட்ச் டி20 சீரிஸ்.. போட்டி அட்டவணை வெளியீடு

0
173
ICT

பெரிய கிரிக்கெட் நாடுகள் சிறிய அணிகளுக்கு எதிராகப் போட்டிகளில் பங்கேற்கும் பொழுதுதான், சிறிய நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களுக்கு கணிசமான வருமானங்கள் கிடைக்கும். அதன் மூலம் அவர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டை பலப்படுத்த முடியும்.

இந்திய அணி குறைந்தது இரண்டு வருடத்தில் ஒரு முறையாவது ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறது. மேலும் கடந்த இரண்டு முறையாக அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்தும் விளையாடுகிறது.

- Advertisement -

இதற்கு முன்பாக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணி தனிப்பட்ட முறையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சுற்றுப்பயணம் செய்தும் இந்தியாவில் வைத்தும் விளையாடி இருக்கிறது.

பின்பு ஜிம்பாப்வே கிரிக்கெட் பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்த பிறகு அந்த அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதை இந்திய அணி நிறுத்தி இருக்கிறது. ஆனாலும் கடந்த முறை சென்று ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது.

இந்த முறை ஜூலை மாதம் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் செய்ய இருக்கும் இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. ஒரு நாள் போட்டிகள் என்றால் மூன்று போட்டிகள் உடன் முடிவு பெற்று விடும். எனவே அந்த அட்டவணையை பயன்படுத்தி 5 டி20 போட்டிகள் விளையாடப்படுகிறது.

- Advertisement -

இந்த தொடரின் முதல் போட்டி ஜூலை 6ஆம் தேதி ஆரம்பித்தது தொடர்ச்சியாக ஜூலை 7 , ஜூலை 10, ஜூலை, 13 ஜூலை 14 ஆகிய தேதிகளில் நடைபெற்று முடிவுக்கு வருகிறது. மேலும் இந்த ஐந்து போட்டிகளும் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் மட்டுமே நடக்கின்றன.

இந்த ஆண்டில் மார்ச் மாதம் இறுதியில் ஆரம்பிக்கும் 17 வது ஐபிஎல் தொடர் மே மாதம் இறுதியில் முடிவுக்கு வரும். இதற்கு அடுத்து ஜூன் மாதம் 2-ம் தேதி முதல் டி20 உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் தொடங்கி ஜூன் 29ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

இதையும் படிங்க : “தப்பு உங்க மேலதான்” – இந்திய அணிக்கு ஆதரவாக வந்த ஆஸி பிராட் ஹாக்

இவற்றையெல்லாம் முடித்துக்கொண்டு இந்திய அணி ஜூன் 6ஆம் தேதி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. டி20 உலக கோப்பை முடிந்து இந்த தொடர் நடக்கின்ற காரணத்தினால், அடுத்த சில ஆண்டுகள் இந்திய டி20 கிரிக்கெட்டில் இடம்பெறப் போகின்ற வீரர்கள் மட்டுமே, இந்தத் தொடருக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.