என் நாட்டுல என்னை எப்படி நடத்துறாங்க தெரியுமா?.. ஆனா இந்தியா அப்படியே வேற மாதிரி – டேவிட் வார்னர் பேட்டி

0
31404
Warner

ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் மிகவும் வித்தியாசமான வீரர் டேவிட் வார்னர். இவரது வாழ்க்கையை ஒரு திரைப்படமாக கூட எடுக்கும் அளவுக்கு நிறைய ஏற்றத்தாழ்வுகள், திருப்பங்கள் உண்டு. இந்த நிலையில் சில முக்கியமான விஷயங்கள் குறித்து அவர் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

டேவிட் வார்னர் தன்னுடைய அதிரடியான பேட்டிங் திறமையின் காரணமாக உள்நாட்டு சிவப்புப்பந்து கிரிக்கெட்டில் விளையாடாமலே, ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு தேர்வான அதிசய வீரராக இருக்கிறார். இப்படி ஒரு வாய்ப்பை இதுவரையில் ஆஸ்திரேலியா எந்த வீரருக்கும் கொடுத்தது கிடையாது.

- Advertisement -

வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அதிரடியான வீரராக களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்துபாராட்டு விமர்சனங்கள் என கலந்து சந்தித்தவர். அணிக்காக எதையும் செய்ய தயாராக இருக்கக்கூடியவர். அவருடைய இந்த மனப்பான்மையே அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மோசமான பின் விளைவுகளை உருவாக்கியது.

2018 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அவர்களது நாட்டில் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கிய டேவிட் வார்னர் ஒரு வருடம் ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்து விலக்கி வைக்கப்பட்டார். இந்த காலகட்டத்தில் அவர் மிகவும் சிரமங்களைக் எதிர்கொண்டார். ஆனால் அந்தத் தடைக்குப் பிறகு திரும்பி வந்த அவரது விளையாட்டில் மட்டுமில்லாமல் மன நிலையிலும் நிறைய மாற்றம் இருந்தது. ஆக்ரோஷமான அவர் ஒரு ஜாலியான நபராக மாற்றம் கொண்டார். மேலும் ஐபிஎல் தொடரில், கிரிக்கெட் தாண்டி இந்திய திரைப்படங்களுக்கு ரீல் செய்வதில் பல பேரை சென்று அடைந்தார்.

தற்போது ஒரு முக்கியமான விஷயம் குறித்து பேசி இருக்கும் டேவிட் வார்னர் “நான் எப்பொழுது இந்தியாவிற்குள் வந்தாலுமே என்னை அறியாமல் என்னுடைய முகத்தில் ஒரு பெரிய புன்னகை உண்டாகிவிடும். என்னுடைய நாட்டில் ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற்ற மனிதர்களை எப்படியாவது விமர்சனம் செய்தே ஆக வேண்டும் என்கின்ற ஒரு பழக்கம் இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : 6 போட்டி 13 விக்கெட்.. விலகுறது ரொம்ப கஷ்டமா இருக்கு.. திருப்பிக் கொடுக்க வருவேன் – மதிஷா பதிரனா பேட்டி

இதனால்தான் நான் ஆஸ்திரேலியாவில் மைதானத்திற்குள் வந்தாலே நான் மலிங்காவிடம் எப்படி ஆட்டம் இழந்தேன் என்கின்ற வீடியோ உடனே பெரிய திரையில் ஓட ஆரம்பித்து விடும். ஆனால் இங்கு இந்தியாவில் அப்படி கிடையாது. இங்குள்ள மக்கள் பெரும்பாலும் பாசிட்டிவான, அன்பான மனநிலை கொண்டவர்களாக இருக்கிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.