ஹெட் கிளாசன் இருக்கும் போது.. ஓவருக்கு 5 ரன் அடிக்கிறதா?.. வெளியே அனுப்பி இருக்கனும் – மேத்யூ ஹைடன் விமர்சனம்

0
850
Hayden

நடப்பு ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்களுக்கு நிறைய சாதகங்கள் இருந்தபோதிலும் கூட, டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் அணுகக்கூடிய விதம் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து மாறி இருக்கிறது என்று கூறலாம். நேற்று லக்னோ ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி அப்படித்தான் இருந்தது. ஆனால் இந்த போட்டியில் லக்னோ அணியின் பேட்ஸ்மேன்கள் அணுகுமுறை குறித்து ஹைடன் விமர்சனம் செய்திருக்கிறார்.

நேற்று ஐதராபாத் அணிக்கு எதிராக அவர்களது சொந்த மைதானத்தில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்வது என அறிவித்தது. இந்த நடைமுறையை அவர்களுடைய லக்னோ சொந்த மைதானத்தில் அவர்கள் கடைப்பிடித்து வந்தார்கள். ஆனால் அதை மாற்றி, செஸ் செய்யும் பொழுது ஹைதராபாத் தடுமாறும் என தப்புக் கணக்கு போட்டு விட்டார்கள்.

- Advertisement -

மேலும் முதலில் பேட்டிங் செய்ய வந்த லக்னோ அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து முதல் ஆறு ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே எடுத்தது. மேலும் 10 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்தது. ஓவருக்கு ஐந்து ரன் வீதத்தில் விளையாடக்கூடிய அளவுக்கு விக்கெட் பந்துவீச்சுக்கு சாதகமாக இல்லை என்பது தான் உண்மை. கேப்டன் கேஎல்.ராகுல் 33 பந்தில் 29 ரன், க்ருனால் பாண்டியா 21 பந்தில் 24 ரன்கள் எடுத்தார்கள். லக்னோ அணிக்கு இது பெரிய பின்னடைவை உருவாக்கியது.

ஆனால் இதைத் தொடர்ந்து விளையாடிய ஹைதராபாத் அணி பவர் பிளேவில் மட்டுமே 107 ரன்கள் சேர்த்தது. இது லக்னோ அணி அடித்ததை விட 80 ரன்கள் அதிகம். மேலும் லக்னோ 10 ஓவரில் 57 ரன்கள் எடுத்திருந்த பொழுது, இவர்கள் அதைவிட இரண்டு பந்துகள் குறைவாக சந்தித்து 9.4 ஓவர்களில் 167 ரன்கள் விக்கட் இல்லாமல் எடுத்தார்கள். இது லக்னோ அணியை விட 110 ரன்கள் அதிகம்.

தற்பொழுது இதுகுறித்து பேசி இருக்கும் மேத்யூ ஹைடன் கூறும் பொழுது “அவர்கள் விளையாடும் பொழுது வெளியே வர சொல்லி இருக்க வேண்டும். அது ஓவருக்கு ஐந்து ரன் மட்டுமே அடிக்கக்கூடிய விக்கெட் கிடையாது. யாராவது ஒரு பேட்ஸ்மேன் மேல் வரிசையில் இன்டெண்ட் காட்டி அதிரடியாக விளையாடியிருக்க வேண்டும். அப்படி யாரும் செய்யவில்லை. ஹெட், கிளாசன் இருக்கும் பொழுது 160, 170 ரன்கள் போதாது. நீங்கள் ஓவருக்கு பத்து ரன்கள் எடுக்க வேண்டும் என்கின்ற எண்ணத்துடன் விளையாட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : இத்தனை கேமரா இருக்கும்போது இது சரியில்ல.. இப்ப கேஎல் ராகுல் இதை செய்யனும் – கிரேம் ஸ்மித் பேட்டி

இதுகுறித்து ஆர்சிபி முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசன் கூறும் பொழுது “தற்பொழுது லக்னோ அணியில் மயங்க் யாதவ் இல்லாமல் போனது, அந்த அணிக்கு எக்ஸ் பேக்டர் இல்லாமல் போனதாக ஆகிறது. மேலும் நேற்றைய போட்டியில் மோசின் கானும் இல்லை. ரவி பிஸ்னாய் பந்துவீச்சும் நல்ல முறையில் அமையவில்லை. எனவே அவர்களுடைய பௌலிங் யூனிட் தாக்குதல் நடத்தக்கூடியதாக தெரியவில்லை. இதனால் அவர்களுக்கு தோல்விகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.