இத்தனை கேமரா இருக்கும்போது இது சரியில்ல.. இப்ப கேஎல் ராகுல் இதை செய்யனும் – கிரேம் ஸ்மித் பேட்டி

0
613
Smith

நேற்று ஹைதராபாத் மைதானத்தில் ஹைதராபாத் அணிக்கு எதிராக லக்னோ அணி படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பிறகு மைதானத்தில் லக்னோ அணையின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா லக்னோ கேப்டன் கேஎல்.ராகுல் இடம் தனது அதிருப்தியை கடுமையான முறையில் தெரிவித்தார். தற்பொழுது இது பெரிய சர்ச்சையாகி வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு கேப்டன் கேஎல்.ராகுல் 33 பந்துகளில் 29 ரன்கள் மட்டுமே எடுத்தார். அடுத்து க்ருனால் பாண்டியா 21 பந்தில் 24 ரன்கள் மட்டுமே எடுத்தார். இவர்கள் இருவர் மட்டுமே ஏறக்குறைய 20 ஓவர்களில் 9 ஓவர்களை விளையாடி, 54 பந்துகளில் 53 ரன்கள் மட்டுமே எடுத்தார்கள்.

- Advertisement -

அதே சமயத்தில் இலக்கை நோக்கி பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சேர்ந்து விக்கெட் தராமல் பவர் பிளேவில் மட்டுமே 107 ரன்கள் குவித்தார்கள். போட்டியை அந்த இடத்திலேயே முடித்து விட்டார்கள். மேலும் தொடர்ந்து விளையாடி ஒட்டுமொத்தமாக 56 பந்தில் போட்டியை முடிவுக்கு கொண்டு வந்து விட்டார்கள்.

இதே ஆடுகளத்தில் லக்னோ அணியின் வீரர்கள் விளையாடியது அந்த அணி உரிமையாளரை கடுமையாக கோபப்படுத்தி இருந்தது. மைதானத்தில் போட்டி நடந்து கொண்டிருக்கும் பொழுதே அவர் தன்னுடைய அதிருப்தியை அருகில் இருந்தவர்களிடம் தெரிவித்துக் கொண்டு இருந்தார்.

இந்த நிலையில் போட்டி முடிந்து மைதானத்திற்குள் நேரடியாக வந்த அவர் கேஎல்.ராகுல் இடம் மிகக் கடுமையான முறையில் பேசிக்கொண்டு இருந்தார். ஒரு அணியின் கேப்டனை பல்லாயிரம் பேர் பார்க்கக்கூடிய வகையில் நேரடியாக இப்படியான முறையில் நடத்துவது சரியானது கிடையாது.

- Advertisement -

இதையும் படிங்க : பும்ரா உடல் தகுதி இருந்தால் தான் விளையாட முடியும் – லெஜன்ட் வால்ஸ் வெளிப்படையான அறிவுரை

தற்பொழுது இதுகுறித்து தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் பேசும்பொழுது “சஞ்சீவ் கோயங்கா அணியின் மீது பெரிய ஆர்வம் கொண்ட உரிமையாளர். அவரது அணி போட்டியில் முழுமையாக தோல்வி அடைந்ததால் அங்கு உணர்ச்சிகள் நிறைய காணப்பட்டது. இந்த உரையாடல் மூடிய கதவுகளுக்கு பின்னால் நடந்திருக்க வேண்டும். இங்கு சுற்றி பல கேமராக்கள் இருக்கின்றன. இப்போது கே.எல். ராகுல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் என்ன நடந்தது என்று விளக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.