6 போட்டி 13 விக்கெட்.. விலகுறது ரொம்ப கஷ்டமா இருக்கு.. திருப்பிக் கொடுக்க வருவேன் – மதிஷா பதிரனா பேட்டி

0
342
Pathirana

தற்போது டி20 கிரிக்கெட்டுக்கு சில விசேஷ திறமைகள் வீரர்களிடம் தேவையாக இருக்கிறது. அப்படியான வீரர்களுக்கு டி20 கிரிக்கெட் லீக் சந்தையில் மிகப்பெரிய வரவேற்பும் லாபமும் கிடைக்கிறது. இப்படி விசேஷ திறமை கொண்ட வீரராக இருக்கும் மதிஷா பதிரனா காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணியை விட்டு சீக்கிரத்தில் விலகுவதும் குறித்து வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார்.

தன்னுடைய ஸ்லிங் பவுலிங் ஆக்சன் மூலம் பேட்ஸ்மேன்களுக்கு பந்தைக் கணிப்பதில் பெரிய சிரமத்தை கொடுக்கக் கூடியவராக மதிஷா பதிரனா இருக்கிறார். மேலும் இவரால் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீச முடிவதால், இந்த பவுலிங் ஆக்சனும் இருப்பதால் இவர் டி20 கிரிக்கெட்டுக்கு மிகவும் அவசியமான பந்துவீச்சாளராக மாறுகிறார்.

- Advertisement -

இதன் காரணத்தினாலே மாற்று வீரராக வந்து சிஎஸ்கே அணிக்கு இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடிய பொழுது, இவரது திறமையை ஸ்டெம்புகளுக்கு பின்னால் இருந்து கணித்த தோனி, இவரை அடுத்து சிஎஸ்கே அணியின் நிரந்தர வீரராக மாற்றிக்கொண்டார். மேலும் இவரை சிஎஸ்கே அணி தொடர்ந்து தக்க வைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் ஆறு போட்டிகளில் 13 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கும் இவர், தொடை பகுதியில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக மேற்கொண்டு சிஎஸ்கே அணிக்கு ஐபிஎல் தொடரில் விளையாட முடியாமல் இலங்கை திரும்பியிருக்கிறார். இது தனிப்பட்ட முறையில் அவருக்கும் மேலும் சிஎஸ்கே அணிக்கும் பெரிய இழப்பாக அமைந்திருக்கிறது.

இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் அவர் கூறும் பொழுது “இது எனக்கு மிகவும் நல்ல சீசன். நான் ஆறு போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தேன். ஒரு போட்டியில் ஆட்டநாயகன் விருது கூட வென்று இருந்தேன். நான் எல்லா இடங்களிலிருந்தும் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். எனவே இந்த நான் அதற்கு முயற்சி செய்தேன். எனது பயிற்சியாளர்கள் மட்டும் இல்லாமல் மகி பாய் போன்ற சீனியர் வீரர்களிடமிருந்தும் நிறைய கற்றுக் கொண்டேன்.

- Advertisement -

இதையும் படிங்க : என்னது ஸ்ட்ரைக் ரேட் முக்கியமில்லையா?.. செட்டில் ஆக டைம் எல்லாம் கேட்க முடியாதுங்க – சஞ்சு சாம்சன் பேட்டி

தற்பொழுது என்னுடைய வாழ்க்கையில் சிஎஸ்கே அணி ஒரு மிகப்பெரிய பகுதியாக இருக்கும்பொழுது நான் சீக்கிரத்தில் அணியை விட்டு வெளியேறுவது வருத்தமாக இருக்கிறது. இது மிகவும் கடினமான ஒன்று. நான் உங்களை மீண்டும் சந்திப்பேன் என்று நம்புகிறேன். நான் விளையாடியது ஒன்று இரண்டு வருடமாக இருந்தாலும் கூட, எனக்கு நிறைய அன்பு கிடைத்து இருக்கிறது. எனவே அந்த அன்பை நான் திருப்பிக் கொடுக்க விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.