ஹர்திக் பாண்டியா தோனி கிடையாது.. அவர் பேச்சை மும்பை டீம்ல கேட்காத காரணம் வேற – ஏபி டிவில்லியர்ஸ் பேச்சு

0
1184
Hardik

நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா குறித்து மிகவும் வெளிப்படையாக ஏபி டிவில்லியர்ஸ் பேசி இருக்கிறார்.

மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு டிரேடிங் முறையில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா வாங்கி, தங்களது வெற்றிகரமான கேப்டன் ரோஹித் சர்மாவை அந்த பொறுப்பில் இருந்து நீக்கி, ஹர்திக் பாண்டியாவையே புதிய கேப்டனாகவும் நியமித்தது.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தின் இந்த இரண்டு முடிவுகளுமே பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதோடு அதிர்ச்சியையும் கொடுத்தது. மேலும் இது அந்த அணியின் ரசிகர்களுக்கும், அணியின் வீரர்களுக்குமே சரியான முடிவாக அமையவில்லை. வீரர்கள் எதிர்ப்பை பெரிய அளவில் வெளிப்படுத்தாவிட்டாலும், ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக மைதானத்தில் பெரிய அளவில் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

இந்த நிலையில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணி, ஒரு அணியாக இணைந்து செயல்படாத காரணத்தினால் முதல் அணியாக பிளே ஆப் சுற்றில் இருந்து நடப்பு ஆண்டில் வெளியேறி இருக்கிறது. ஹர்திக் பாண்டியாவுக்கு தனிப்பட்ட கிரிக்கெட் வாழ்க்கையில் இது மிகப் பெரிய சோதனைக் காலமாக அமைந்திருக்கிறது.

இதுகுறித்து ஏபி.டிவில்லியர்ஸ் கூறும் பொழுது “ஹர்திக் பாண்டியா கேப்டன்சி மிகவும் துணிச்சலான ஒன்று. இது ஈகோ உந்துதலால் ஏற்படக்கூடியது. ஆனால் எப்போதும் இப்படியே இருப்பார் என்று நான் கூற மாட்டேன். ஆனால் இப்படித்தான் தோனியின் வழியில் பொறுமையாக அமைதியாக கேப்டன்சி செய்ய வேண்டும் என முடிவெடுத்ததாக தெரிகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : போட்டிக்கு முன்பாகவே சர்ச்சை.. சிஎஸ்கேவுக்கு மட்டும் தனி நியாயமா?.. குஜராத் டைட்டன்ஸ் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?

அவருடைய இந்த பாணி கேப்டன்சி பொறுப்பை பல காலமாக அணியில் விளையாடி வரும் மூத்த வீரர்களால் அப்படியே எடுத்துக் கொள்ள முடியாது. இது குஜராத் அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஈடுபட்டது. ஏனென்றால் அங்கு நிறைய இளம் வீரர்கள் இருந்தார்கள். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் அப்படி கிடையாது. தற்போது ஹர்திக் பாண்டியாவின் துணிச்சல் இங்கு தேவையில்லை. மாறாக வெற்றிக்கு என்ன வழியோ அதைத்தான் வீரர்கள் எதிர்பார்ப்பார்கள்” என்று கூறியிருக்கிறார்.