தற்போது சிஎஸ்கே அணியில் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் சேர்ந்து செயல்படும் விதம் மூளை வேலை செய்யாத மாதிரி தெரிவதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி விமர்சனம் செய்திருக்கிறார்.
தற்போது சிஎஸ்கே அணி ஐபிஎல் வரலாற்றில் எந்த நேரத்திலும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தடுமாற்றத்தில் இருக்கிறது. இதுவரை விளையாடி உள்ள ஆறு போட்டிகளில் ஐந்து போட்டிகளை தொடர்ந்து தோற்று இருக்கிறது. அவர்களுடைய தனிப்பட்ட ஐபிஎல் வரலாற்றில் இதுவரை ஐந்து போட்டிகளை தொடர்ந்து தோற்றது கிடையாது. மேலும் சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் தொடர்ந்து மூன்று போட்டிகளை முதல்முறையாக தோற்று இருக்கிறது.
அஸ்வின் உள்ளே வெளியே பிரச்சனை
ஐபிஎல் தொடருக்கு மூன்று நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர்களை சிஎஸ்கே அணி நிர்வாகம் வாங்கியது குறித்து ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு 10 கோடி கொடுத்து வாங்கியது காரணத்தினால், தேவையான மற்ற பேட்ஸ்மேன்களை வாங்குவதில் சிரமம் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாகவே தற்போது பார்மில் இல்லாத பேட்ஸ்மேன்களை வாங்கி இவ்வளவு மோசமான நிலைக்கு சிஎஸ்கே அணி சென்று இருக்கிறது எனவும் விமர்சிக்கிறார்கள்.
மேலும் பிளேயிங் லெவனில் இதுவரையில் ஆறு போட்டிகளிலும் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெற்று வருகிறார். ஆனால் பந்துவீச்சில் அவருடைய தாக்கம் எதுவும் இல்லை. மேலும் மூன்று சுழல் பந்துவீச்சாளர்கள் இருப்பதால் பவர் பிளேவில் ஒரு ஓவர் வீச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஆனால் அந்த நேரத்தில் அவர் நிறைய ரன்களை விட்டும் தருகிறார். இது எல்லாம் சேர்த்து அவரை அணிக்குள் கொண்டு வந்த தோனி மற்றும் அஸ்வின் இருவரையும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
இருவருக்கும் மூளை வேலை செய்வதை நிறுத்தி விட்டதா?
இந்த நிலையில் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டி குறித்து பேசி இருக்கும் மனோஜ் திவாரி கூறும் பொழுது “சிஎஸ்கே அணியினர் ஏன் இந்த குறிப்பிட்ட போட்டியில் உடனுக்குடன் ஆக ட்ராயிங் போர்டுக்கு சென்று எதையும் ஆலோசிக்கவில்லை. தொடர்ந்து தோற்றுக் கொண்டிருக்கும் பொழுது நீங்கள் மீண்டு வருவதற்கு ஆலோசனைகள் செய்ய வேண்டியது அவசியம் ஆனதாக இல்லையா? இதையெல்லாம் தாண்டி சில விஷயங்கள் என்னுடைய புரிதலுக்கு அப்பாற்பட்டவை ஆக இருக்கிறது”
இதையும் படிங்க : ரோகித்துக்கு இந்த ஒன்னு மட்டும் நடந்துட்டா.. உடனே சதம் அடிச்சிடுவாரு.. வெயிட் பண்ணுங்க – மைக்கேல் கிளார்க் பேட்டி
“அஸ்வின் எப்பொழுதும் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு ரவுண்டு த ஸ்டெம்பில் இருந்து பந்து வீசுவார். ஆனால் கொல்கத்தா போட்டியில் ஓவர் த ஸ்டெம்பில் இருந்து பந்து வீசினார். ஏன் என்று புரியவில்லை. இதனால்தான் சுனில் நரைனுக்கு எல்லாம் வசதியாகி போனது. மேலும் அஸ்வினை கூப்பிட்டு எதுவும் தோனி பேசவும் இல்லை. இருவருக்கும் மூளை வேலை செய்வது நின்று விட்டது போல தெரிகிறது” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.






