நடப்பு ஐபிஎல் தொடரில் தடுமாறி வரும் ரோகித் சர்மா சீக்கிரத்தில் சதம் அடிப்பார் எனவும் அதற்கு ஒரு குறிப்பிட்ட சம்பவம் மட்டும் நடந்தால் போதும் எனவும் ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்திருக்கிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது மிக வலிமையான அணியாக பேப்பரில் காணப்பட்டாலும் கூட, அந்த அணி தன்னுடைய ஐந்து போட்டிகளில் நான்கு போட்டிகளை தோற்று புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. சிறந்த அணி தோல்வி அடைவது பலருக்கும் ஏன்? எனவே புரியவில்லை.
ரோகித் சர்மாவின் ஐபிஎல் சோகம்
ரோகித் சர்மா கேப்டனாக இதுவரை ஐந்து ஐபிஎல் கோப்பைகளை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெற்றுத் தந்திருந்த போதிலும் கூட, இதுவரை ஐபிஎல் சீசங்களில் ஒரே ஒருமுறை மட்டுமே தொடக்க ஆட்டக்காரராக இருந்தும் 500 ரன்கள் தாண்டி எடுத்திருக்கிறார். ஆனால் ஒரு முறை கூட அவரால் 600 ரன்கள் எடுக்க முடியவில்லை.
மேலும் ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா இதுவரையில் 80 முறை ஒற்றை இலக்கத்தில் ஐபிஎல் தொடரில் ஆட்டம் இழந்து இருக்கிறார். இது மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் யூனிட்டை தற்பொழுது பெரிய அளவில் பாதிக்கிறது. துவக்க ஆட்டக்காரர்கள் இடமிருந்து முதல் விக்கெட்டுக்கு நல்ல பார்ட்னர்ஷிப் கிடைக்காதது அந்த அணி தோல்வி அடைவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இது நடந்தால் சதம் வரும்
இது குறித்து மைக்கேல் கிளார்க் பேசும் பொழுது “ரோகித் சர்மா ஒரு முழுமையான சூப்பர் ஸ்டார் என்று நான் நினைக்கிறேன். அவர் சதம் அடிப்பதற்கு இன்னும் சில போட்டிகள் தேவைப்படுகிறது. அதாவது அவரிடம் இருந்து ஒரு 40 ரன்கள் அல்லது 60 ரன்கள் கொண்ட இன்னிங்ஸ் வரவேண்டும். அதற்குப் பிறகு அவருக்கு நல்ல வேகம் கிடைத்துவிடும். நீங்கள் அவருடைய சிறந்த பேட்டிங்கை பார்ப்பீர்கள். அவர் நிச்சயம் சதம் அடிப்பார்”
இதையும் படிங்க : அபிஷேக் ஷர்மா அந்த பேப்பரை எப்ப பாக்கெட்ல வச்சாரு?.. எங்க பிளான் இதுதான் – டிராவிஸ் ஹெட் பேட்டி
“இதிலிருந்து அவருக்கு நல்ல நம்பிக்கை கிடைக்கும் அதற்கு பிறகு ரோகித் சர்மா எப்படி விளையாடுவார் என்று உங்களுக்கே தெரியும். நான் அவருடைய பார்ம் பற்றி எப்பொழுதும் கவலைப்பட மாட்டேன். சிறந்த வீரர்கள் மீது நாம் நம்பிக்கை வைத்திருக்கிறோம். அதனால் அதிக எதிர்பார்ப்புகளையும் வைத்திருக்கிறோம். நீங்கள் இரண்டு போட்டிகளில் சரியாக விளையாடாமல் போகலாம். ஆனால் உங்களுடைய கிளாஸ் என்பது நிரந்தரமானது” என்று கூறி இருக்கிறார்.






