“இங்கிலாந்து ஃபிளைட் ஏறலாம்.. வெத்து விளம்பரம் வேலைக்காகாது” – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சனம்

0
263
Srikanth

2022 ஆம் ஆண்டிலிருந்து, ஜோ ரூட் கேப்டன் பதவியில் இருந்து நகர்ந்த பிறகு, பென் ஸ்டோக்ஸ் மற்றும் மெக்கலம் கூட்டணியில், இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டை அதிரடியாக விளையாட ஆரம்பித்தது.

இது அவர்களுக்கு உள்நாட்டில் மிக நன்றாக கை கொடுத்தது. அதே சமயத்தில் பாகிஸ்தானில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக வெல்லவும் வைத்தது. மேலும் நியூசிலாந்தில் தொடரை இழக்காமல் திரும்பினார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் உள்நாட்டில் நடைபெற்ற ஆசஸ் தொடரை இரண்டுக்கு இரண்டு என சமனும் செய்தார்கள். ஆனால் எந்த இடத்திலும் அவர்கள் பாஸ்பால் ஆட்டம் முறையில் தோல்வி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக பாஸ்பால் அணுகுமுறை மீது இங்கிலாந்தில் பெரிய அளவில் விமர்சனங்கள் எதுவும் இல்லாமல் இருந்து வந்தது. இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் இதை பெரிதும் விரும்ப ஆரம்பித்தார்கள். மேலும் வெளியில் இருந்தும் சில குறிப்பிட்ட அளவுக்கு ஆதரவு கிடைத்தது.

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் காப்பாற்ற வந்த கடவுள் என்பது போலான தோற்றம் உருவானது. இந்தச் சமயத்தில் இந்தியாவிற்கு வந்து முதல் டெஸ்ட் போட்டியை வென்றதும், பாஸ்பால் அணுகுமுறை மீது யாரும் விமர்சனங்களை முன்வைக்க முடியாத சூழல் உருவானது. இப்படியான நேரத்தில்தான் பாஸ்பால் இரண்டு போட்டிகளில் தொடர்ந்து இந்தியாவிடம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருக்கிறது.

- Advertisement -

இது குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறும் பொழுது ” முடிந்தால் இங்கிலாந்து அணி அடுத்த பிளைட் பிடித்து நாட்டிற்கு செல்லலாம். ஆனால் அவர்கள் இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் விளையாட வேண்டியது இருக்கிறது. பாஸ்பால் பற்றி இவர்களை பரப்பி கொண்டதுதான் எல்லாம் என்று நினைக்கிறேன். பாஸ்பால் மீது பெரிய ஹைப்பை ஏற்றி வைத்து விட்டார்கள். ஆனால்இந்திய சூழ்நிலையில் வெல்வதற்கு, இங்கு ஏற்றார் போல் பேட்டிங் செய்யவும் பந்து வீசவும் திறமைகள் வேண்டும்.

இந்த பாஸ்பால் அணுகுமுறை நீண்ட நாட்களுக்கு வேலை செய்யும் என நான் நினைக்கவில்லை. மெக்கலம் மற்றும் ஸ்டோக்ஸ் போன்றவர்கள் முதல் பந்தில் இருந்தே அடிக்க முடியும். ஆனால் அதே வேலையை மற்ற எல்லோராலும் செய்ய முடியாது.

இதையும் படிங்க : “தம்பி சர்பராஸ் கான் நீ நல்ல உதாரணம்.. ஆனா இதையும் செய்யனும்” – கங்குலி கோரிக்கை

சில சமயங்களில் நீங்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறிக்கொள்ள வேண்டும். எப்பொழுதும் ஒரே மாதிரியான காரணங்களை சொல்லிக் கொண்டே இருக்க முடியாது. பாஸ்பால் அணுகுமுறை மிகவும் மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாக நான் நினைக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.