“சதம் அடித்தும் நீக்கப்பட்டேன்.. தோனி பதில் சொல்லியே ஆகனும்” – மனோஜ் திவாரி பரபரப்பு பேட்டி

0
642
Dhoni

ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டில் இருந்து பெங்கால் மாநில அணிக்காகவும் இந்தியாவுக்காகவும் விளையாடியிருக்கும் மனோஜ் திவாரி நேற்றுடன் ஓய்வு பெற்றுக்கொண்டார்.

முழுமையான வலது கை பேட்ஸ்மேன் ஆனா இவர் பகுதிநேர சுழற் பந்துவீச்சாளரும் ஆவார். இந்திய அணிக்காக சர்வதேச போட்டியில் விக்கெட்டுகளும் கைப்பற்றி இருக்கிறார், மேலும் பெஸ்ட் இந்திய அணிக்கு எதிராக ஆட்டம் இழக்காமல் ஒரு சதமும் அடித்து இருக்கிறார். இவரது கிரிக்கெட் வாழ்க்கை மொத்தம் 13 போட்டிகளில் முடிவுக்கு வந்துவிட்டது.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சதம் அடித்த பிறகு, தொடர்ச்சியாக இவருக்கு 6 போட்டிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதற்கு அடுத்து இவருக்கு ஜிம்பாப்வே தொடரில் வாய்ப்பு கிடைத்தது, கடைசியாக இவர் விளையாடிய அந்த தொடரில் ஒரு அரை சதமும் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்க.

ஆனாலும் மனோஜ் திவாரிக்கு அதற்குப் பிறகு இந்திய அணியில் வாய்ப்பு தரப்படவில்லை. சதம் மற்றும் அரை சதம் அடித்திருந்தும், பந்துவீச்சில் விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தும் கூட, இவரை அத்தோடு இந்திய கிரிக்கெட் நிர்வாகம் கைவிட்டது, இப்போது வரை சர்ச்சையான ஒன்றாகவே இருந்து வருகிறது.

இதுகுறித்து பேசி உள்ள மனோஜ் திவாரி
“எனக்கு எப்பொழுது வாய்ப்பு கிடைத்தாலும் இதற்கான பதிலை நான் மகேந்திர சிங் தோனியிடம் கேட்க விரும்புகிறேன். நான் இதை அவரிடம் அன்பாக கேட்க விரும்புகிறேன். நான் சதம் அடித்த பிறகும் ஏன் அடுத்த தொடரில் இருந்து நான் நீக்கப்பட்டேன் என்று கேட்க விரும்புகிறேன்.

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோஹித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா என யாருமே ரன் எடுக்காத பொழுது, என்னை தேர்வு செய்து நான் ரன் எடுக்காமல் போயிருந்தால் அங்கு இழப்பதற்கு என்ன இருக்கிறது?

இந்தியாவுக்காக நான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வில்லை. நான் அப்பொழுது 65 முதல் தர போட்டிகளில் விளையாடியிருந்தேன். என்னுடைய ரன் சராசரி மொத்தம் 65 இருந்தது. இந்தியா வந்திருந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நட்பு ரீதியான போட்டியில் சதம் அடித்திருந்தேன். அதற்கு முன்பு இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் இதே போலான போட்டியில் 93 ரன்கள் எடுத்திருந்தேன்.

இதையும் படிங்க : “திலக் வர்மா பத்தி இத தப்பா சொல்லிட்டாங்க.. ஆர்சிபி-ல இருந்து இருக்கனும்” – புலம்பிய முன்னாள் பயிற்சியாளர்

நான் தேர்வு செய்யப்படுவதற்கு மிகவும் நெருக்கத்தில் இருந்தேன். ஆனால் அவர்கள் அப்படியான நேரத்தில் யுவராஜ் சிங்கை தேர்வு செய்தார்கள். எனக்கு டெஸ்ட் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. மேலும் நான் சதம் அடித்த பிறகும் என அணியை விட்டு நீக்கினார்கள். நம்முடைய நம்பிக்கை உச்சத்தில் இருக்கும் பொழுது, யாரோ ஒருவர் அதை அழித்து அந்த வீரரின் கதையை முடிக்கிறார்” எனக் கூறியிருக்கிறார்.