“திலக் வர்மா பத்தி இத தப்பா சொல்லிட்டாங்க.. ஆர்சிபி-ல இருந்து இருக்கனும்” – புலம்பிய முன்னாள் பயிற்சியாளர்

0
770
Tilak

ஐபிஎல் தொடரில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற மெகா ஏலம் மிகவும் முக்கியமானதாக அமைந்திருந்தது. அந்த ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி செயல்பட்ட விதத்தில் எல்லோரும் ஆச்சரியமடைந்து இருந்தார்கள். அந்த வருடம் விளையாட முடியாத ஆர்ச்சர்க்கு எட்டு கோடி கொடுத்த தைரியமாக மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியிருந்தது.

அதே சமயத்தில் அவர்கள் மொத்தமாக இளம் வீரர்கள் மேல் முதலீடு செய்ய ஆரம்பித்தார்கள். காரணம் இஷான் கிஷானுக்கு 15 கோடி, மற்றும் விளையாடாத ஆர்ச்சருக்கு எட்டு கோடி என அவர்கள் 23 கோடியை இழந்திருந்தார்கள்.

- Advertisement -

எனவே மும்பை இந்தியன்ஸ் ஏலக்குழு தொடர்ந்து இளம் வீரர்கள் மேல் முதலீடு செய்ய ஏலத்தில் ஆரம்பித்தது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆகியோருடன் போட்டியிட்டு திலக் வர்மாவை 1.70 கோடிக்கு வாங்கியது.

தற்போது அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கியமான பேட்மேன் ஆக மட்டும் இல்லாமல், எதிர்கால இந்திய அணியிலும் மிக முக்கியமான பேட்ஸ்மேனாக மாறி வருகிறார். அவருக்கு இந்திய வெள்ளைப்பந்து அணியில் நிரந்தர இடம் உறுதியாகி வருகிறது.

அதே சமயத்தில் அந்த ஏலத்தில் வழக்கம் போல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிறைய தவறுகளை செய்து, அரசியல் படேல் மற்றும் ஹசரங்கா ஆகியோருக்கு நிறைய பணம் செலவழித்து சிக்கிக் கொண்டது. இதனால் அவர்களால் சரியான வீரர்களை பேட்டிங்கில் வாங்க முடியவில்லை. குறிப்பாக அவர்களுக்கு தேவைப்பட்ட இந்திய வீரர்களை வாங்க முடியவில்லை.

- Advertisement -

இதுகுறித்து ஆர்சிபி முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசன் தெரிவிக்கும் போது “அந்த நேரத்தில் நான் திலக் வர்மாவில் இன்னும் கொஞ்சம் ஏலத்தில் சென்று இருக்க வேண்டும். அவர் உலக தரமான வீரர் என்பதை நிரூபித்து விட்டார். டாப் ஆட்டரில் ஒரு இந்திய இடது கை பேட்ஸ்மேன் இருப்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்திருக்கும். நாங்கள் அந்த இடத்தில் தவறு செய்து விட்டோம்.

இதையும் படிங்க : “எது ஜெய்ஸ்வாலுக்கு குரு இங்கிலாந்தா?.. டக்கெட் என்ன பேச்சு இது?” – நாசர் ஹூசைன் பதிலடி

டாப் ஆர்டரில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் இருந்திருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும். அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஷார்ட் பந்துகளுக்கு தடுமாறியதாக நிறைய சொல்லப்பட்டது. இதன் காரணமாக அவரை வாங்காமல் விட்டு விட்டோம். ஆனால் ஐபிஎல் தொடருக்குள் வந்து அவர் தான் யார் என்பதை நிரூபித்து விட்டார்” எனக் கூறியிருக்கிறார்.