மேக்ஸ்வெல்லுக்கு பேங்க் பேலன்ஸ் கவலையே கிடையாது.. சும்மாவே எல்லாம் கிடைக்குது – மனோஜ் திவாரி விமர்சனம்

0
214
Maxwell

நடப்பு ஐபிஎல் தொடர் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு ஆஸ்திரேலியாவின் அதிரடி நட்சத்திர வீரர் கிளன் மேக்ஸ்வெல்லுக்கு மிகவும் மோசமான ஒன்றாக அமைந்திருக்கிறது. இந்த நிலையில் அவரது செயல்பாடு குறித்து இந்திய முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர் சி பி அணி வீரர் மேக்ஸ்வெல் மொத்தம் ஒன்பது போட்டிகளில் விளையாடி வெறும் 52 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். இதில் ஒரு போட்டியில் அவர் 28 ரன்கள் அதிகபட்சமாக எடுத்திருக்கிறார். மீதி 8 போட்டிகளில் சேர்த்து 34 ரன்கள் மட்டுமே வந்திருக்கிறது.

- Advertisement -

ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு கடுமையாக போராடி நுழைந்து ஆச்சரியப்படுத்தியது. கடைசி லீக் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக மேக்ஸ்வெல் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஒரு சிறிய பங்களிப்பை கொடுத்திருந்தார். எனவே நாக் அவுட் போட்டியில் நிச்சயம் அவரிடம் இருந்து சிறப்பான பங்களிப்பு வரும் என எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.

இப்படியான நிலையில் நேற்று மிக முக்கியமான சூழ்நிலையில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக வந்த முதல் பந்தையே தூக்கி அடித்து மேக்ஸ்வெல் ஆட்டம் இழந்தார். அந்த இடத்தில் அவர் ஒரு 15 ரன்கள் சேர்த்து இருந்தால் கூட ஒரு சிறிய பார்ட்னர்ஷிப் உருவாகி இருக்கும். கடைசிக் கட்டத்தில் பேட்ஸ்மேன்கள் விக்கெட் கைவசம் இருப்பதால் அதிரடியாக விளையாடுவதற்கான சுதந்திரம் கிடைத்திருக்கும். இதனால் வெற்றிக்கு தேவையான கூடுதல் 20 ரன்கள் ஆர்சிபி எடுத்து இருக்க முடியும்.

தற்பொழுது மேக்ஸ்வெல் குறித்து பேசி இருக்கும் மனோஜ் திவாரி கூறும் பொழுது “மேக்ஸ்வெல் உங்களுக்கு இவ்வளவு அனுபவம் இருக்கிறது. நீங்கள் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடும் பொழுது மிகச் சிறப்பாக விளையாடுகிறீர்கள். ஆனால் ஐபிஎல் தொடருக்கு வரும் பொழுது என்ன நடக்கிறது என்று புரியவில்லை. அவருக்கு ஐபிஎல் தொடரில் விளையாட எந்த ஆர்வமும் இருப்பதாக தெரியவில்லை. அவருடைய பேங்க் பேலன்ஸ் நல்ல நிலையில் இருக்கும். செக் கரெக்டாக வந்து சேர்ந்து விடும்.

- Advertisement -

இதையும் படிங்க : தினேஷ் கார்த்திக் ஓய்வு.. சிஎஸ்கே செய்த நெகிழ்ச்சி செயல்.. எல்லை மீறிய ஆர்சிபி ரசிகர்களும் பாராட்டு

இறுதி முடிவு என்னவாக இருக்க முடியும்? நீங்கள் வெற்றி பெறுவதற்கான விளையாட வேண்டும். ஐபிஎல் முதல் சீசனில் ஆர்சிபி அணி சரியாக செயல்படாத பொழுது, இங்கே உட்கார்ந்து அதற்கான காரணங்களை ஆராய்ந்து கொண்டிருந்தோம். அங்கிருந்து அவர்கள் சிறப்பாக செயல்பட்டு பிளே ஆப் சுற்றுக்கு சென்றார்கள். ஆனால்இது போதாது. இறுதியாக கோப்பையை கைப்பற்றுவது தான் சிறந்த முடிவாக இருக்க முடியும்” என்று கூறியிருக்கிறார்.