தினேஷ் கார்த்திக் ஓய்வு.. சிஎஸ்கே செய்த நெகிழ்ச்சி செயல்.. எல்லை மீறிய ஆர்சிபி ரசிகர்களும் பாராட்டு

0
2987

நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது.

இந்த தோல்வியின் மூலம் பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து அணியின் மூத்த வீரரான தினேஷ் கார்த்திக் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்தார். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் செய்த செயல் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களைத் தாண்டி தற்போது ஆர்சிபி ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

2008ஆம் ஆண்டு முதன்முதலில் டெல்லி கேப்பிட்டல் அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக், அதன் பிறகு 2011ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். அதன் பிறகு 2012மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் மும்பை அணிக்காகவும் திரும்ப 2014ஆம் ஆண்டு டெல்லி அணிக்காகவும், அதற்குப் பிறகு 2016 17ஆம் ஆண்டுகளில் குஜராத் அணிக்காகவும் விளையாடியிருக்கிறார்.

2018ஆம் ஆண்டு கொல்கத்தா அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற தினேஷ் கார்த்திக் 19 போட்டிகளை கொல்கத்தா அணிக்காக வென்று கொடுத்து கௌதம் கம்பீர்க்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். கம்பீர் கொல்கத்தா அணிக்காக விளையாடி 61 போட்டிகளை வென்று கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல ஐபிஎல் போட்டிகளில் விக்கெட் கீப்பராக அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை தினேஷ் கார்த்திக் பெற்றுள்ளார். 4463 ரன்கள் குவித்து இரண்டாவது இடத்திலும், 5000 ரன்களைக் கடந்து மகேந்திர சிங் தோனி முதல் இடத்திலும் இருக்கிறார்.

2018 முதல் 2021ஆம் ஆண்டு வரை கொல்கத்தா அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக் அதன் பிறகு 2022 முதல் 2024ஆம் ஆண்டு வரை பெங்களூரு அணிக்காக விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2015ஆம் ஆண்டு ஒருமுறை பெங்களூர் அணிக்காக விளையாடி உள்ளார். கடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் தோல்வியின் மூலம் தனது ஐபிஎல் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்திருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தனது டிவிட்டர் பக்கத்தில் தினேஷ் கார்த்திக் டெல்லி அணியில் விளையாட துவங்கியது முதல், பெங்களூர் அணியில் விளையாடியது வரை புகைப்படங்களாக பதிவிட்டு ‘விடாமுயற்சியின் தலைசிறந்தவர்’ என்ற வாசகத்தையும் பதித்து புகைப்படம் ஆக வெளியிட்டது. மேலும் அந்த புகைப்படத்திற்கு மேல் “நல்லா இருக்கு டிகே, துணிச்சல் ஆர்வம் மற்றும் சுத்த துணிச்சலான வாழ்க்கைக்கு ஒரு பெரிய விசில்” என கமெண்ட்டையும் பதிவிட்டு வெளியிட்டது.

இதையும் படிங்க:சிஎஸ்கே மும்பைக்கு.. அடுத்த வருஷம் ஆர்சிபி வேற லெவல்ல இருக்கும்.. ஆன்ட்டி பிளவர் விடமாட்டார் – மைக்கேல் வாகன் கருத்து

இதைப் பார்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவிக்க, பதிலுக்கு ஆர்சிபி ரசிகர்களும் அந்த புகைப்படத்தில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதுவரை இரு அணி ரசிகர்களுக்கும் இடையே சமூக வலைதளங்களில் காரசாரமான விவாதம் போய்க்கொண்டிருந்த நிலையில், சிஎஸ்கே நிர்வாகத்தின் இந்த பதிவு இரு அணி ரசிகர்களையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.