9 பந்து 9 ரன்.. 2 விக்கெட்.. ஆஸ்திரேலியாவை வீட்டுக்கு அனுப்பியது ஆப்கான்.. பங்களாதேஷ் அணிக்கு எதிராக திரில் வெற்றி

0
592

நடப்பு டி20 உலக கோப்பையில் இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி மிக முக்கிய போட்டியாக அமைந்தது. இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா வெளியேறும் என்கின்ற நிலை இருந்தது. இந்த நிலையில் பரபரப்பாக சென்ற போட்டியில் கடைசி கட்டத்தில் ஆப்கானிஸ்தான் வென்று ஆஸ்திரேலியாவை வெளியேற்றி அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருந்தது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரஹமனுல்லா குர்பாஸ் 55 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். இப்ராகிம் ஜட்ரன் 29 பந்தில் 18 ரன்கள், ரஷித் கான் பத்து பந்தில் 19 ரன்கள் எடுத்தார்கள்.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களின் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை 12 ஓவர்களில் பங்களாதேஷ் அணி எட்டினால் அரையிறுதி சுற்றுக்கு அந்த அணியால் தகுதி பெற முடியும் என்கின்ற நிலை இருந்தது. எனவே போட்டியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

இந்த நிலையில் அரை இறுதிக்கு முன்னேறுவதற்காக பங்களாதேஷ் பேட்ஸ்மேன்கள் அடித்து விளையாட சென்று விக்கெட்டுகளை கொடுத்து வந்தார்கள். இன்னொரு முனையில் துவக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் நிலைத்து நின்று விளையாடி ஆப்கானிஸ்தான் அணிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்தார்.

இந்த நிலையில் மழையால் போட்டி பாதிக்கப்பட 19 ஓவருக்கு இலக்கு 114 என மாற்றியமைக்கப்பட்டது. நவீன் உல் ஹாக் வீசிய 18 வது ஓவரில் வெற்றிக்கு 9 பந்துகளில் ஒன்பது ரன்கள் தேவைப்பட்டது. அந்த நிலையில் பங்களாதேஷ் அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து இரண்டு விக்கெட் மட்டுமே கைவசம் வைத்திருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க: நேத்து ஜெயிச்சி இருக்கலாம்.. ஆனா இந்தியா சரியான டீம் கிடையாது.. அவர் வேணும் – ஹர்பஜன் சிங் விமர்சனம்

இந்தச் சூழலில் நவீன் உல் ஹக் அடுத்தடுத்து டஸ்கின் அஹ்மத் மற்றும் முஸ்தஃபீஸூர் ரஹ்மான் இருவரது விக்கடையும் கைப்பற்றி ஆப்கானிஸ்தான் அணிக்கு திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். ஆப்கானிஸ்தான அணி ஆஸ்திரேலியாவை வெளியேற்றி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது. மேலும் அவர்களுடைய கிரிக்கெட் வரலாற்றில் இது மிக முக்கிய வரலாற்று வெற்றியாக பதிவானது. நவீன் உல் ஹக் மற்றும் ரஷித் கான் தலா நான்கு விக்கெட் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கை வகித்தார்கள்.