லக்னோ டீம் சேப்பாக்கத்துக்கு வரட்டும்.. அங்க எங்க ஹோம் ஒர்க் வேற மாதிரி இருக்கும் – ருதுராஜ் பேட்டி

0
580
Ruturaj

இன்று ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மற்றும் லக்னோ அணிகள் மோதிய போட்டியில், லக்னோ அணி சிஎஸ்கே அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சிஎஸ்கே அணி கூடுதலாக 10 முதல் 15 ரன்கள் எடுத்திருக்க வேண்டும் என அந்த அணியின் கேப்டன் ருதுராஜ் தெரிவித்திருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணிக்கு பேட்டிங்கில் முன்கூட்டியே அனுப்பப்பட்ட ரவீந்திர ஜடேஜா 40 பந்தில் 57 ரன்கள், தோனி கடைசிக் கட்டத்தில் 8 பந்தில் 28 ரன்கள் எடுக்க, அந்த அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணிக்கு துவக்க ஜோடி குயிண்டன் டி காக் மற்றும் கேப்டன் கே எல் ராகுல் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 130 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வலிமையான துவக்கத்தை கொடுத்தார்கள். இது லக்னோ அணியின் வெற்றியை மிக எளிதாக மாற்றியது.

குயின்டன் டி காக் 43 பந்தில் 54 ரன்கள், கேப்டன் கேஎல்.ராகுல் 53 பந்தில் 82 ரன்கள் எடுத்தார்கள். களத்தில் நின்று 12 பந்தில் 23 ரன்கள் எடுத்து நிக்கோலஸ் பூரன் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியின் வெற்றியை உறுதி செய்தார். தற்பொழுது புள்ளி பட்டியலில் சிஎஸ்கே மூன்றாவது இடத்திலும், லக்னோ ஐந்தாவது இடத்திலும் தொடர்கின்றன. இரண்டு அணிகளுமே 7 போட்டியில் நான்கு வெற்றிகள் பெற்று இருக்கின்றன.

இன்றைய போட்டியின் தோல்விக்கு பின் பேசிய சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் “நாங்கள் பேட்டிங்கை நன்றாகவே முடித்தோம். பவர் ப்ளேவில் எங்களுக்கு கிடைத்த தொடக்கத்தை தொடர்ந்து நாங்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. நாங்கள் தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். மேலும் 15 முதல் 20 ரன்கள் குறைவாக இருந்தோம். அதே சமயத்தில் நாங்கள் இருந்த நிலைக்கு இதைவிட பெரிய ரன்களை கேட்கவும் முடியாது. இம்பேக்ட் பிளேயர் விதி இருக்கின்ற காரணத்தினால் எப்பொழுதும் 20 ரன்கள் கூடுதலாக தேவை.

- Advertisement -

இதையும் படிங்க : 19 ஓவர்.. 8 விக்கெட்.. பதிரனா ஒற்றை தவறு.. சிஎஸ்கே வெற்றி லக்னோவுக்கு கைமாறியது எப்படி?

மேலும் இப்படியான ஆடுகளங்கள் முதலில் விளையாடும் பொழுது மந்தமாக இருந்தாலும் கூட, பனிப்பொழிவு வந்த பிறகு பேட்டிங் செய்வதற்கு சாதகமாக மாறிவிடுகிறது. எனவே கூடுதலாக ரன்கள் முதலில் விளையாடும் பொழுது தேவை. பவர் ப்ளேவில் நாங்கள் விக்கெட்டுகளை எடுக்க வேண்டும். இந்த இடத்தில் நாங்கள் மேம்பட வேண்டும். சேப்பாக்கத்தில் திரும்ப லக்னோ அணிக்கு எதிராக விளையாட இருப்பது நல்லது. மேலும் எங்களுக்கு தொடர்ந்து மூன்று போட்டிகள் சேப்பாக்கத்தில் இருக்கிறது. நாங்கள் நல்ல ஹோம் வொர்க் செய்து திரும்ப வருவோம்” என்று கூறியிருக்கிறார்