63 பந்து 124 ரன்.. லக்னோ ஸ்டோய்னிஸ் புது வரலாறு.. சிஎஸ்கே புள்ளி பட்டியலில் பின்னடைவு

0
318
CSK

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று சிஎஸ்கே மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் தனியாளாக லக்னோ அணியை வெல்ல வைத்திருக்கிறார்.

இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணிக்கு ரகானே 1(3), டேரில் மிட்சல் 10(11), ரவீந்திர ஜடேஜா 16(19) என அடுத்தடுத்து வெளியேறி ஏமாற்றம் தந்தார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் ருதுராஜ் மற்றும் சிவம் துபே இருவரும் 12-வது ஓவரில் ஜோடி சேர்ந்தார்கள். இதற்குப் பிறகு சிஎஸ்கே அணியின் ரன் ரேட் எகிற ஆரம்பித்தது. இந்த ஜோடி 47 பந்தில் 14 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆச்சரியப்படுத்தியது. சிறப்பாக விளையாடிய சிவம் துபே 27 பந்தில் 66 ரன்கள் குவித்தார்.

இன்று தொடக்க வீரராக வந்த சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் சதம் அடித்து கடைசிவரை களத்தில் நின்று, 60 பந்தில் 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 108 ரன்கள் குவித்தார். ஒரு பந்தை மட்டுமே சந்தித்த தோனி பவுண்டரி அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. மேட் ஹென்றி 28 ரன்னுக்கு ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ மணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் குயிண்டன் டி காக் 0(3), கேப்டன் கேஎல் ராகுல் 16(14) ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதற்கு அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 13(19), நிக்கோலஸ் பூரன் 34(15) ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். ஆனால் ஒரு முனையில் நிலைத்து நின்ற மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 56 பந்துகளில் அதிரடியாக சதம் அடித்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து கடைசி இரண்டு ஓவர்களுக்கு லக்னோ வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. பதிரனா வீசிய 19வது ஓவரில் 15 ரன்கள் வந்தது. இதற்கு அடுத்து முஸ்தஃபிசுர் ரஹமான் வீசிய கடைசி ஓவரில், ஸ்டாய்னிஸ் 6,4,4,4 என வரிசையாக அடித்து, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை அதன் சொந்த மைதானத்தில் லக்னோ அணி வீழ்த்த வைத்தார். இறுதி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்ற அவர் 63 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 124 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிங்க : ருதுராஜால் திட்டு வாங்கிய ரவி பிஸ்னாய்.. அம்பயரிடம் சண்டை போட்ட கேஎல் ராகுல்.. களத்தில் என்ன நடந்தது?

இந்தப் போட்டியில் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் ரன் சேஸில் அதிகபட்ச ரன் அடித்து சாதனை படைத்திருக்கிறார். மேலும் சேப்பாக்கத்தில் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது எட்டு போட்டியில் ஐந்து வெற்றி உடன் நான்காவது இடத்திற்கு லக்னோ அணியும், எட்டு போட்டியில் நான்கு வெற்றி உடன் சிஎஸ்கே அணி 5 வது இடத்திற்கு சரிந்திருக்கிறது.