ருதுராஜால் திட்டு வாங்கிய ரவி பிஸ்னாய்.. அம்பயரிடம் சண்டை போட்ட கேஎல் ராகுல்.. களத்தில் என்ன நடந்தது?

0
2041
Rahul

இன்று சிஎஸ்கே மற்றும் எல்எஸ்ஜி அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் தொடரில் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் இடையே பல சுவாரசியமான சம்பவங்கள் நடைபெற்றிருக்கிறது. கோபப்படாத கேஎல்.ராகுல் இரண்டு முறை கோபப்பட்டு இருக்கிறார்.

இன்று எட்டாவது போட்டியில் விளையாடிய சிஎஸ்கே அணிக்கு கேப்டன் ருதுராஜ் ஏழாவது முறையாக டாஸ் தோற்றார். இரண்டாவது பந்து வீசினால் பனிப்பொழிவு வரலாம் என கேஎல்.ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். முதலில் பேட்டிகை ஆரம்பித்த சிஎஸ்கே அணிக்கு ரகானே, டேரில் மிச்சல் மற்றும் ரவீந்திர ஜடேஜா என தொடர்ந்து ஏமாற்றினார்கள்.

- Advertisement -

இன்று லக்னோ அணியின் கேப்டன் கேஎல்.ராகுல் பவர் பிளேவில் குர்னால் பாண்டியாவை கொண்டு வரவில்லை. அதற்கு பதிலாக மணிக்கட்டு முக்கிய சுழற் பந்துவீச்சாளர் ரவி பிஸ்னாயை கொண்டு வந்தார். இந்த ஓவரில் ருதுராஜ் ஒரு கேட்ச் வாய்ப்பில் தப்பினார். விக்கெட்டுக்கு ஒரு வாய்ப்பு இருந்தது.

ஆனாலும் கூட அந்த ஓவரில் 10 ரன்கள் தாண்டி சென்றதால் கேஎல்ராகுல் கோபமாக ரவி பிஸ்னாயை பார்த்து “பந்தை வெளியில் போடாமல் உள்ளே போடு” என்று சத்தமாக கூறினார். கூலான கேப்டன் கேஎல்.ராகுல் திடீரென கோபப்பட்டு பேசியதை களத்தில் நம்ப முடியவில்லை.

அதே சமயத்தில் யாஸ் தாக்கூர் பந்துவீச்சில் சிவம் துபே ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்திருந்தார். இதற்கு அடுத்து மீண்டும் யாஸ் தாக்கூர் பந்து வீச வந்த பொழுது சிவம் துபேவுக்கு வைடு கொடுக்கப்பட்டது. இதைப் பார்த்த கேஎல்.ராகுல் ரிவ்யூ சென்று விட்டு, நேராக அம்பயர்களிடம் வந்து நீண்ட நேரம் கோபமாக விவாதம் செய்து கொண்டு இருந்தார். இதற்கு அடுத்து இறுதியில் மூன்றாவது நடுவர் அதை வைடு என அறிவித்தார். சிஎஸ்கே அணிக்கு எதிராக எப்படியும் இரண்டாவது வெற்றியை பெற வேண்டும் என கேஎல்.ராகுல் இருந்திருக்கிறார். இதன் காரணமாகவே இயல்புக்கு மாறாக இன்று களத்தில் கோபமாக நடந்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : 6,6,6.. 7 சிக்ஸர்கள்.. நீதான்யா இதுக்கு சரியான ஆளு.. சிவம் துபே அடிக்கு தல தோனி ரியாக்சன்

ஏற்கனவே லக்னோ அணிக்கு எதிராக அவர்களது சொந்த மைதானத்தில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்த பொழுது, சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் அடுத்து சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியில், எங்களது சொந்த சூழ்நிலையில் நாங்கள் பலமாக திரும்பி வருவோம் என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.