19 ஓவர்.. 8 விக்கெட்.. பதிரனா ஒற்றை தவறு.. சிஎஸ்கே வெற்றி லக்னோவுக்கு கைமாறியது எப்படி?

0
1354
Dhoni

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கேப்டன் கேஎல்.ராகுல் சிறப்பான ஆட்டத்தால் சிஎஸ்கே அணியை லக்னோ அணி எளிதாக வென்றது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி சிஎஸ்கே அணியை முதலில் பேட்டிங் செய்ய வைத்தது. சிஎஸ்கே அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ரச்சின் ரவீந்திரா ரன் ஏதும் இல்லாமலும், ரகானே 24 பந்தில் 36 ரன்கள் எடுத்தும் ஆட்டம் இழந்தார்கள். மூன்றாவது இடத்தில் வந்த கேப்டன் ருதுராஜ் 13 பந்தில் 17 ரன்கள் எடுத்தார். சிவம் துபே ஏமாற்றம் அளிக்கும் வகையில் எட்டு பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். அடுத்து வந்த சமீர் ரிஸ்வி 5 பந்தில் 1 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் மொயின் அலி ஜோடி 33 பந்தில் 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. மொயின் அலி 20 பந்தில் 30 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த தோனி அதிரடியாக விளையாடி 8 பந்துகளில் 28 ரன்கள் அடித்தார். இறுதிவரை ஆட்டம் இழக்காமல் சிறப்பாக நின்று விளையாடிய ரவீந்திர ஜடேஜா 40 பந்துகளில் 5 பவுண்டரி ஒரு சிக்சர் உடன் 57 ரன்கள் எடுத்தார். தோனி ஜடேஜா ஜோடி 13 பந்தில் 35 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

சிஎஸ்கே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியின் தரப்பில் பந்துவீச்சில் குர்னால் பாண்டியா மூன்று ஓவர்கள் பந்துவீசி 16 ரன்கள் விட்டு தந்து மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணிக்கு குயிண்டன் பீகாக் மற்றும் கேப்டன் கேஎல்.ராகுல் இருவரும் சிறப்பான துவக்கத்தை கொண்டு வந்தார்கள். அரைசத பார்ட்னர்ஷிப்பை தாண்டிய இந்த ஜோடி, இறுதியாக 90 பந்துகளில் 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பிரிந்தது. சிறப்பாக விளையாடிய குயிண்டன் டி காக் 43 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஏபிடியா மாறிய தோனி.. 17 வருடத்தில் அடிக்காத ஷாட்.. ரசிகர்களால் அதிர்ந்த லக்னோ மைதானம்

சிறப்பாக விளையாடிய கேஎல்.ராகுல் 53 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் எடுத்தார். கடைசியில் நிக்கோலஸ் பூரன் 12 பந்தில் 23 ரன், ஸ்டாய்னிஸ் 7 பந்தில் 8 ரன் எடுக்க, லக்னோ அணி 19 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் அரை சதம் அடித்த லக்னோ துவக்க ஆட்டக்காரர் குயிண்டன் டீ காக் ஆரம்பத்தில் தந்த எளிய கேட்ச் வாய்ப்பை பதிரனா தவற விட்டார். அதைப் பிடித்திருந்தால், அங்கிருந்து லக்னோ அணிக்கு அழுத்தத்தை உண்டாக்கி வெற்றியை நோக்கி சிஎஸ்கே சென்று இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது!