ஏபிடியா மாறிய தோனி.. 17 வருடத்தில் அடிக்காத ஷாட்.. ரசிகர்களால் அதிர்ந்த லக்னோ மைதானம்

0
332
Dhoni

தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இன்றைய போட்டியிலும் மும்பை அணிக்கு எதிராக விளையாடியது போல தோனி அதிரடியாக விளையாடி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்து வீசுவது என முடிவு செய்ய, சிஎஸ்கே அணிக்கு இந்த முறையும் துவக்க ஆட்டக்காரராக ரகானே வந்தார். அவர் 24 பந்தில் 36 ரன்கள் எடுத்து வெளியேற, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ருதுராஜ் மற்றும் சிவம் துபே இருவரும் பெரிய ரன்கள் இல்லாமல் வெளியேறினார்கள்.

- Advertisement -

இதன் காரணமாக ரவீந்திர ஜடேஜா பேட்டிங் செய்ய முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டார். அவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகச் சிறப்பாக விளையாடிய 34 பந்தில் அரைசதம் அடித்தார். இன்னொரு பக்கம் மொயின் அலி அதிரடியாக 20 பந்தில் 30 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

இந்த நிலையில் வழக்கம்போல் கடைசி இரண்டு ஓவர்களுக்கு பேட்டிங் செய்ய வந்த தோனி மோசின் கான் ஓவரில் ஓவர் கவரில் பவுண்டரி ஒன்றை அடித்தார். இதற்கு அடுத்து வீசப்பட்ட ஒரு ஷார்ட் பந்துக்கு, ஸ்டெம்ப்பை விட்டு ஆப் சைடு நகர்ந்து, பந்தை பின்புறமாக ஸ்கூப் முறையில் சிக்ஸர் பறக்க விட்டு ஆச்சரியப்படுத்தினார்.

தோனி எப்பொழுதுமே இப்படியான மாடர்ன் கிரிக்கெட் ஷாட் விளையாட மாட்டார். தன்னுடைய பவரை நம்பி ஹிட் அடிப்பது தான் அவருடைய வழக்கம். ஆனால் இன்று இளம் வீரர்கள் போல அவரும் வித்தியாசமாக விளையாடினார். அவர் இன்று விளையாடிய இந்த ஷாட் யாருமே எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை.. சச்சினும் செய்யாத சாதனை.. 42 வயதில் தோனி மாஸ் சம்பவம்

இதற்கு அடுத்து தோனி புத்திசாலித்தனமாக இப்படியான ஷாட்டுக்கு செல்லவில்லை. ஏனென்றால் அவர் இப்படி விளையாடுவார் என நினைத்து பந்தை அடுத்த ஓவரில் யாஸ் தாக்கூர் மேலே வீசினார். ஆனால் தோனி கிரீஸ் உள்ளே நின்று 100 மீட்டர் தாண்டி இன்னும் ஒரு சிக்ஸை அடித்து பிரம்மாண்டப்படுத்தினார். மேலும் இத்துடன் மூன்று பவுண்டரிகளும் இன்றைய போட்டியில் அழகாக விளையாடிய அடித்தார். மொத்தம் இன்று எட்டு பந்துகளை மட்டுமே சந்தித்து, 311 ஸ்ட்ரைக் ரேட்டில் 28 ரன்கள் அடித்து அசத்தினார். சிஎஸ்கே 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது.