சிஎஸ்கே போட்டி.. 156 கிமீ வேக மயங்க் யாதவ் ஆடுவாரா.? – லக்னோ கோச் லான்ஸ் க்ளூஸனர் பேட்டி

0
861

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற உள்ள முக்கியமான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியும் மோதுகின்றன. லக்னோ அணியின் புயல் வேகப்பந்துவீச்சாளரான மயங்க் யாதவ் இந்த போட்டியில் களமிறங்குவது குறித்து லக்னோ அணியின் பயிற்சியாளர் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் வெற்றியும், இரண்டு போட்டிகளில் தோல்வியும் தழுவி தற்போது புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டு துறைகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வலுவாக விளங்குகிறது.

- Advertisement -

சென்னை அணியை எதிர்த்து விளையாடும் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி இதுவரை 6 போட்டிகளில் மூன்று போட்டிகளில் வெற்றியும், மூன்று போட்டிகளில் தோல்வியும் தழுவி இருக்கிறது. முதலில் வெற்றியுடன் தொடங்கிய லக்னோ அணி அந்த அணியின் புயல் வேகப்பந்து வீச்சாளர் ஆன மயங்க் யாதவின் காயத்திற்கு பிறகு அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வருகிறது.

கடைசியாக குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஒரு ஓவரை மட்டுமே வீசிவிட்டு அடி வயிற்று வலி காரணமாக பாதியிலேயே களத்தை விட்டு வெளியேறினார். அதற்குப் பிறகு காயம் இன்னும் குணம் அடையாததால் லக்னோ அணி விளையாடிய 2 போட்டியில் பங்கேற்கவில்லை. அந்த இரண்டு போட்டிகளிலும் லக்னோ அணி தோல்வியே சந்தித்துள்ளது.

மயங்க் யாதவ் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் லக்னோ அணிக்கு முக்கிய பங்காற்றி இரண்டு போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இன்று நடைபெற உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் பங்கு பெறுவாரா? அவரது உடல்நிலை எந்த நிலையில் உள்ளது? என்பது குறித்து லக்னோ அணியின் உதவி பயிற்சியாளர் லான்ஸ் க்ளுஸ்னர் முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்த அவர் கூறும் பொழுது
“சென்னை அணிக்கு எதிரான போட்டியில் அவர் களமிறங்குவது குறித்த உறுதியான தகவல் எனக்கு எதுவும் தெரியவில்லை. ஆனால் தற்போது வலை பயிற்சியில் நன்றாக பந்து வீசி வருகிறார். அவரது உடல்தகுதிக்குதான் நாங்கள் முன்னுரிமை கொடுக்கிறோம். அவர் பங்கேற்பது குறித்து எங்களால் எதுவும் உறுதியாக கூற முடியாது என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: எங்க எல்லாருக்குமே பெரிய சோதனை.. அந்த பஞ்சாப் பையனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு – ஹர்திக் பாண்டியா பேட்டி

156 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடிய அவரது புயல் வேகப்பந்து வீச்சு ஆஸ்திரேலியா வீரர்களான மேக்ஸ்வெல் மற்றும் கேமரூன் கிரீன் போன்ற முன்னணி வீரர்களையே வீழ்த்தியுள்ளது. இவரது காயம் லக்னோ அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்றைய போட்டியில் களமிறங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.