எங்க எல்லாருக்குமே பெரிய சோதனை.. அந்த பஞ்சாப் பையனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு – ஹர்திக் பாண்டியா பேட்டி

0
242
Hardik

நேற்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், மும்பை இந்தியன் அணி பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெறும் நிலையில் இருந்து, இறுதியாக 9 ரன் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணியின் ரன் வித்தியாசத்தை பஞ்சாப் கிங்ஸ் அணியின் அசுதோஸ் சர்மா குறைத்தார். அவரது அதிரடி பேட்டிங் பற்றி மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டி பேசியிருக்கிறார்.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சூரியகுமார் யாதவ் 53 பந்தில் 78 ரன்கள், திலக் வருமா 18 பந்தில் 34 ரன்கள் எடுக்க, அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் வந்த அணி 200 ரன்களை தாண்டும் என்கின்ற நிலையும் இருந்தது.

- Advertisement -

இதற்கடுத்து பேட்டிங் செய்ய வந்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் முதல் ஏழு பேட்ஸ்மேன்கள் 11 ரன்கள் அணி எடுப்பதற்குள் ஆட்டம் இழந்து விட்டார்கள். எனவே அடுத்தடுத்து சீக்கிரம் விக்கெட்டுகளை விட்டு எளிதாக பஞ்சாப் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியிடம் சரணடைந்து விடும் என்று எல்லோரும் நினைத்தார்கள்.

இப்படியான நிலையில் தான் பஞ்சாப் கிங்ஸ் அணியின் இளம் வீரர் அசுத்தோஸ் சர்மா 28 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஏழு சிக்ஸர்கள் உடன் 61 ரன்கள் குவித்து ஆட்டத்தை பஞ்சாப் பக்கம் திருப்பி விட்டார். மூன்று ஓவர்கள் மீதமிருந்த நிலையில் எதிர்பாராமல் அவர் ஆட்டம் இழந்த காரணத்தினால், பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தது.

இது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசும்பொழுது “இது மிக நல்ல ஆட்டம். இந்த போட்டியில் அனைவருமே சோதிக்கப்பட்டார்கள். இந்த போட்டியில் நிச்சயம் நம்முடைய கேரக்டர்கள் சோதிக்கப்படும் என்று நாங்கள் பேசி இருந்தோம். போட்டியில் நாம் வெகு எளிதாக முன்னணியில் இருக்கிறோம் என்று நினைப்போம். ஆனால் இப்படி சீக்கிரத்தில் போட்டி ஒரு பக்கமாக மாறும்.

- Advertisement -

இதையும் படிங்க : 1328 நாட்கள் கம்பேக்.. முகமது அமீருக்கு நடந்த சோகம்.. வெறும் 2 பந்து.. முடிவுக்கு வந்த பாக் நியூசி போட்டி

அசுதோஸ் சர்மா விளையாடியது போலவிளையாடுவது நம்ப முடியாத ஒன்று. அவருக்கு நல்ல சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. நாங்கள்எந்த நிலையில் இருக்கிறோம் என்பது பற்றி இல்லாமல், நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்று பேசினோம். நாங்கள் மென்மையான பந்துகளை வீசக்கூடாது என்று நினைத்தோம். ஆனால் பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஷாட்கள் விளையாடினார்கள். எங்களிடமிருந்து சில மென்மையான ஓவர்கள் வர செய்தன” என்று கூறி இருக்கிறார்.