மயங்க் யாதவ் காயம் எப்படி இருக்கிறது?.. ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடுவாரா – யாஸ் தாகூர் வெளியிட்ட தகவல்

0
16
Mayank

நேற்று லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில் அதிவேக பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் திடீர் காயத்தின் காரணமாக, ஒரு ஓவர் மட்டுமே வீசி இருந்த நிலையில் களத்தை விட்டு வெளியேறினார். இந்த நிலையில் அவருடைய காயம் எப்படி இருக்கிறது? அவர் மேற்கொண்டு விளையாடுவாரா என்பது குறித்து யாஸ் தாக்கூர் கூறியிருக்கிறார்.

நேற்றைய போட்டியில் லக்னோ அணி குஜராத் அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது வெற்றியைப் பெற்று புள்ளி பட்டியலிலும் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. குஜராத் அணி 5 போட்டிகளில் மூன்று போட்டிகளை தோற்று தற்போது புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

மேலும் நேற்றைய போட்டியில் தனது அதிவேகத்தால் கிரிக்கெட் உலகத்தின் கவனத்தை திருப்பிய மயங்க் யாதவ் ஒரு ஓவர் மட்டுமே பந்து வீசி என் நிலையில் காயம் காரணமாக வெளியேறி இருந்தார். அந்த ஒரு ஓவரில் அவர் வழக்கமான 150 கிலோமீட்டர் வேகத்தை ஒரு முறை கூட எட்டவில்லை. எனவே அவர் மேற்கொண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? என்பது குறித்த பெரிய சந்தேகங்கள் ஏற்பட்டது.

போட்டியில் அணியின் முக்கிய பந்துவீச்சாளர் காயம் அடைந்திருந்த போதும், லக்னோ அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் யாஸ் தாக்கூர் 3.5 ஓவர்கள் பந்து வீசி 30 ரன்கள் மட்டும் விட்டு தந்து ஐந்து விக்கெட் கைப்பற்றி, வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தார். இவரே நேற்று ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

அதற்குப் பின் பேசியிருக்கும் இவர் கூறும் பொழுது ” என் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியதற்காக அணி நிர்வாகம் மற்றும் பயிற்சியாளர்கள் ஜஸ்டின் லாங்கர் மோர்னே மோர்கல் மற்றும் கேப்டன் கேஎல்.ராகுல் பாய் ஆகியோருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் எங்களுடைய திட்டங்களை செயல்படுத்தினோம். நாங்கள் முன்பு செய்தது போலவே இலக்கை பாதுகாத்து வெற்றி பெற முடியும் என கே.எல்.ராகுல் கூறினார். ஆடுகளம் மெதுவாக இருந்தது. எனவே பவுன்சர் மற்றும் வேரியேஷன் முக்கியமாக அமைந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : பும்ரா கிடையாது.. கடைசி ஓவருக்கு 10 ரன்.. இந்த 21 வயது பையனே சிறந்த பவுலர் – பாபர் அசாம் பேட்டி

மயங்க் யாதவ் காயம் காரணமாக வெளியேறியதால் இது என்னுடைய நாளாக இருக்கலாம் என கேஎல்.ராகுல் என்னிடம் கூறினார். மேலும் அவர் என்னிடம் வெளிப்புற விஷயங்களை கவனிக்க வேண்டாம், திட்டங்களில் வேலை செய்யுங்கள் வெற்றி பெறலாம் என்று கூறினார். மயங்க் யாதவ் இப்பொழுது நன்றாக இருக்கிறார் அவர் குறித்து கவலைப்பட எதுவும் இல்லை” எனக் கூறியிருக்கிறார்.