பும்ரா கிடையாது.. கடைசி ஓவருக்கு 10 ரன்.. இந்த 21 வயது பையனே சிறந்த பவுலர் – பாபர் அசாம் பேட்டி

0
577
Babar

நியூசிலாந்து அணி ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்கு பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்கிறது. இந்த தொடர் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி முதல் துவங்குகிறது. இந்த நிலையில் ஒரு டி20 போட்டியின் கடைசி ஓவரில் 10 ரன்கள் எடுக்க விடாமல் தடுக்க வேண்டும் என்றால், எந்த பந்துவீச்சாளர் சிறந்தவராக இருப்பார் என்கின்ற கேள்வி பாபர் அசாமிடம் முன்வைக்கப்பட்டது.

இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறாததோடு, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும் சென்னையில் வைத்து தோல்வி அடைந்தது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தோற்றது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மிகப்பெரிய புயலை உருவாக்கியது.

- Advertisement -

இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் மட்டுமல்லாது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அமைப்பிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டது. இதில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூன்று வடிவத்தின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் பாபர் அசாம் விலகிக் கொண்டார். தொடர்ந்து வெள்ளைப் பந்து வடிவங்களுக்கு ஷாகின் ஷா அப்ரிடி, சிவப்பு பந்து வடிவத்துக்கு ஷான் மசூத் ஆகியோர் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் முன்னாள் கேப்டன் பாபர் அசாமிடம், டி20 போட்டியில் கடைசி ஓவரில் 10 ரன்கள் எடுக்க விடாமல் எதிரணியை தடுக்க வேண்டும் என்றால், பும்ரா அல்லது நசிம் ஷா இருவரில் சிறந்த பந்துவீச்சாளர் யார் என்கின்ற கேள்வி கேட்கப்பட்டது. இந்தக் கேள்விக்கு பாபர் அசாம் பதிலளித்து பேசி இருக்கிறார்.

இதுகுறித்து பாபர் அசாம் கூறும்பொழுது “முதலில் நசிம் ஷா கிரிக்கெட்டிற்கு திரும்பிய விதம் மற்றும் அவர் காயம் குணமடைந்த விதத்திற்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் அவருக்கு ஏற்பட்ட காயத்திற்கு குணமடைவதற்கு நிறைய காலமாகும் என்று எனக்கு தெரியும். ஆனாலும் கூட அவர் நடந்து முடிந்த பிஎஸ்எல் டி20 லீக்கில் விளையாட வேண்டும் என மிகவும் ஆர்வமாக இருந்து, அதற்காக கடினமாக உழைத்து திரும்பி வந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : தோனி செய்ய வேண்டியது இதை மட்டும்தான்.. மத்தவங்க சொல்ற மாதிரி கிடையாது – மைக்கேல் கிளார்க் பேச்சு

அவரிடம்நிறைய திறமைகள் இருக்கின்றது. அவரைப் போன்ற திறமைகள் கொண்டவரை பாகிஸ்தானில் அடிக்கடி பார்க்க முடியாது. அவர் ஷாஹின் ஷா அப்ரிடி போன்றவர். அவரிடம் சொந்தமான திறமையும் தகுதியும் இருக்கிறது. அவர் தன்னுடைய அனுபவத்திலிருந்து தன்னுடைய வழியை உருவாக்கி இருக்கிறார். டி20 போட்டியில் கடைசி ஓவரில் 10 ரன்களுக்கு யார் சிறந்த பந்துவீச்சாளர் என்றால் நசிம் ஷாதான்” என்று கூறியிருக்கிறார்.