ஆர்சிபி 28 கோடிக்கு வாங்குன அந்த 2பேர் வேண்டாம்.. அதுக்கு பதிலா இவங்கள கொண்டு வாங்க – டாம் மூடி பேச்சு

0
241
RCB

இந்த வருட ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22 ஆம் தேதி துவங்கியது. முதல் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எந்த விதத்திலும் போட்டி அளிக்காமல் ஆர்சிபி அணி வழக்கம்போல் தோற்றது. இதற்கு அடுத்து சொந்த மைதானத்தில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசியில் வெற்றி பெற்றது.

ஒரு போட்டியில் தோல்வி ஒரு போட்டியில் வெற்றி என்று இருந்த நிலையில், ஆர்சிபி அணியின் கலவை சரியாக இருக்கிறதா என்பதை குறித்து ஒரு முடிவுக்கு வர முடியாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று மீண்டும் சொந்த மைதானத்தில் கே கே ஆர் அணிக்கு எதிராக விளையாடிய ஆர்சிபி அணி 16.5 ஓவர்களில் தோல்வி அடைந்தது. அவர்களது பவுலிங் யூனிட் எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிந்தது.

- Advertisement -

இந்த நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தின் போது ஆர்சிபி அணி டிரேடிங் முறையில் 17 கோடி இந்தியன்ஸ் அணியிலிருந்து வாங்கியது. இதற்கு அடுத்து அதிகபட்ச விலையாக ஏலத்தில் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர் அல்ஜாரி ஜோசப்பை 11 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. ஆனால் இவர்கள் ஆர் சி பி அணிக்கு சரியான முறையில் பிளேயிங் லெவனில் செட் ஆகவில்லை.

தற்போது இருக்கும் சூழலில் ஆர்சிபி அணி தங்களது பவுலிங் யூனிட்டை வலிமையாக்கும் வேலைகளை செய்யாமல் தொடரில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்பது தெளிவாக இருக்கிறது. முழுக்க இந்திய பந்துவீச்சாளர்களை நம்பி செல்வதா? அல்லது வெளியில் இருக்கும் வெளிநாட்டு பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு தருவதா? என்று ஆர்சிபி முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு ட்வீட் செய்திருந்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், இப்படியான ஒரு பவுலிங் யூனிட் வைத்துக் கொண்டு ஆர்சிபி அணியால் கோப்பை மட்டும் இல்லாமல் வெற்றி பெறுவதே முடியாத காரியம் என்று கடுமையான விமர்சனம் செய்திருந்தார். அந்த அணியின் தற்பொழுது விக்கெட் டேக்கிங் பவுலர்கள் என்று யாரும் இல்லை.

- Advertisement -

இதையும் படிங்க : சிஎஸ்கேல இந்த 4 பேர்கிட்ட எப்பவும் பேசலாம்.. இதுதான் எனக்கு உதவியா இருக்கு – ரச்சின் ரவீந்தரா பேட்டி

தற்பொழுது ஆர் சி பி அணியின் இந்த பிரச்சனைக்கு தீர்வு சொல்லி உள்ள ஆஸ்திரேலியாவின் டாம் மூடி பேசும் பொழுது ” வெளியில் இருக்கும் வேகப்பந்துவீச்சாளர்கள் நியூசிலாந்தின் லாக்கி பெர்குசன் மற்றும் இங்கிலாந்தின் ரீஸ் டாப்லி இருவரும் பிளேயிங் லெவனில் வரவேண்டும் என்று கூறியிருக்கிறார். இவர்கள் இருவரும் வரவேண்டும் என்றால் தற்போது பிளேயிங் லெவனில் இருக்கும் 17 கோடிக்கு வாங்கப்பட்ட கேமரூன் கிரீன், 11 கோடிக்கு வாங்கப்பட்ட அல்ஜாரி ஜோசப் இருவரும் வெளியேற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.