ஆளப்போறான் தமிழன்.. ஐபிஎல் 2024ல் பங்குபெறும் 11 தமிழக கிரிக்கெட் வீரர்கள் லிஸ்ட்

0
5670

17வது ஐபிஎல் சீசன் வருகிற 22ஆம் தேதி சென்னையில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இதற்காக பத்து அணிகளும் மிகத் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் பல மாநிலங்களில் இருந்து திறமையான இளம் வீரர்களை ஐபிஎல் அணிகள் ஏலத்தில் எடுக்கும். அதில் தமிழ்நாடு மாநிலம் முன்னணியில் உள்ளது.

முரளி விஜய், தினேஷ் கார்த்திக், நடராஜன், ரவிச்சந்திரன் அஸ்வின் என பல நட்சத்திர வீரர்கள் தமிழ்நாட்டின் திறமைகளே. இந்த வருட ஐபிஎல்லிலும் ஜூனியர் தொடங்கி சீனியர் வீரர்கள் என 11 பேர் விளையாட உள்ளனர். அவர்களுக்கான ஊதியமாக இருபது லட்சம் தொடங்கி 8.7 கோடி வரை வழங்கப்படுகிறது, அவர்களைப் பற்றி காண்போம்.

- Advertisement -

டிஎன்பிஎல்லில் விளையாடி புகழ்பெற்ற சாய் சுதர்சன் கடந்த இரு வருடங்களுக்கு முன்பு குஜராத் அணியால் இருபது லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்டார். குஜராத் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு தற்போது இந்திய அணியிலும் இடம் பிடித்து விளையாடி வருகிறார். மற்றொரு லெக் ஸ்பின்னரான ஜதவேத் சுப்பிரமணியம் சன்ரைசர்ஸ் அணியால் 20 லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் குஜராத் அணிக்காக விளையாடி 1.4 கோடி ரூபாய் ஊதியமாக பெறுகிறார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் கலக்கும் அவர் ஆல்ரவுண்டராக பலம் சேர்க்கிறார். மற்றொரு தமிழக வீரரான சித்தார்த் 2.40 கோடி ரூபாய்க்கு லக்னோ அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ரவி ஸ்ரீநிவாசன் சாய் கிஷோர் மூன்று கோடி ரூபாய்க்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்டு இருக்கிறார். இவர் குஜராத் அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சேலத்தைச் சேர்ந்த நடராஜன் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஒரு ஆண்டுக்கு இவர் பெறப்படும் தொகை நான்கு கோடி ரூபாய். யார்க்கர்கள் வீசுவதில் வல்லவர் ஆன இவர் கடந்த சீசனில் பார்ம் இன்றி தவித்து வந்தார். எனவே இம்முறை அந்த குறையை நிவர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

இந்திய அணியின் மூத்த அனுபவ வீரரான தினேஷ் கார்த்திக் 5.5 கோடி ரூபாய்க்கு பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். டிஎன்பிஎல் அதிரடி ஆட்டக்காரரான ஷாருக்கான் இந்த முறை குஜராத் அணியால் 7.40 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளார். இவர் முன்னர் பஞ்சாப் அணிக்காக விளையாடினார்.

தமிழக சுழற் பந்துவீச்சாளரான வருண் சக்கரவர்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவரது ஊதிய தொகை 8 கோடி ரூபாய். சமீப காலமாக கொல்கத்தா அணிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கி வருகிறார். மற்றொரு ஆல் ரவுண்டரான தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் 8.75 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடுகிறார். பந்துவீச்சில் சிறப்பாக செயல்படும் சுந்தர் இந்த முறை பேட்டிங்கிலும் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஐபிஎல் 2024: ஸ்டீவ் ஸ்மித் முதல் ஆர்ஜே பாலாஜி வரை.. வெளியான கிரிக்கெட் வர்ணனையாளர்கள் லிஸ்ட்

இந்த சீசனில் களமிறங்கும் தமிழக வீரர்கள்

சாய் சுதர்சன் (குஜராத்), விஜய் சங்கர்(குஜராத் ), சித்தார்த் (லக்னோ), ரவி ஸ்ரீநிவாசன் சாய் கிஷோர்(குஜராத்), T. நடராஜன் (ஐதராபாத்), ரவிச்சந்திரன் அஸ்வின்(ராஜஸ்தான்), தினேஷ் கார்த்திக்( பெங்களுர்), வருண் சக்கரவர்த்தி(கொல்கத்தா),வாஷிங்டன் சுந்தர், ஜதவேத் சுப்பிரமணியம் (ஐதராபாத்), ஷாருக்கான் (குஜராத்).