டி20 கிரிக்கெட்டின் வளர்ச்சி, ஒட்டுமொத்தமாக கிரிக்கெட் உலகில் பல அதிர்வுகளை உண்டாக்கிய படி மிக வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இதில் கிரிக்கெட்டுக்கு சாதகம், பாதகம் என இரண்டுமே கலந்து இருக்கிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் வெற்றி டி20 கிரிக்கெட்டின் வளர்ச்சியை மிக வேகமாக முன்னே இருந்து இழுத்துக் கொண்டு செல்கிறது.
வருடத்துக்கு வருடம் ஐபிஎல் தொடரின் வீச்சு மிகப் பெரிய அளவில் உலகம் முழுவதும் சென்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக ஒவ்வொரு கிரிக்கெட் நாடுகளில் வாரியங்களும் தங்களுக்கு என தனியாக டி20 லீக்குகள் நடத்த ஆரம்பித்திருக்கின்றன. இப்படி நடத்தப்படும் எந்த டி20 லீக்குகளும் இதுவரையில் நஷ்டத்தை கொடுத்ததாக செய்திகள் இல்லை. எனவே கிரிக்கெட் வடிவத்தில் டி20 கிரிக்கெட் மிகவும் லாபகரமானதாக இருந்து வருகிறது.
மேலும் டி20 கிரிக்கெட்டில் வருகை கிரிக்கெட்டை இதுவரை செல்லாத நாடுகளுக்கு எல்லாம் அழைத்துச் சென்று இருக்கிறது. குறைந்த ஓவர் போட்டி என்கின்ற காரணத்தினால் குறைந்த சவால்கள் மட்டுமே இருப்பதால், குறுகிய காலத்தில் நாடுகள் தங்களுக்கு என ஒரு கிரிக்கெட் அணியை இந்த வடிவத்தில் உருவாக்க முடிவதால், டி20 கிரிக்கெட் உலகம் முழுவதும் பரவி வளர்கிறது. இதன் காரணமாக வருகின்ற ஒலிம்பிக் போட்டிகளிலும் 20 கிரிக்கெட் இடம்பெற இருக்கிறது.
இன்னொரு பக்கத்தில் டி20 கிரிக்கெட் அற்புதமான கிளாசிக் பேட்ஸ்மேன்களுக்கான இடத்தை கிரிக்கெட்டில் அழித்து வருகிறது என்றும் சொல்லலாம். மேலும் உருவாகக்கூடிய வீரர்களும் டி20 கிரிக்கெட்டை மனதில் வைத்து அதற்கேற்றபடியே தயாராகிறார்கள். இதனால் கிரிக்கெட் வேக வேகமாக நடக்கிறது ரசிகர்களுக்கு உற்சாகமாக இருக்கிறது. ஆனால் கிரிக்கெட்டுக்குள் இருக்கும் நுட்பங்கள் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது.
இதற்கு ஒரு படி மேலாக தற்பொழுது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டு இருக்கும் இந்த ஆண்டு 17வது ஐபிஎல் சீசனுக்கான கிரிக்கெட் வர்ணனையாளர்கள் பட்டியல் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனென்றால் அந்தப் பட்டியலில் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் பெயர் இடம் பெற்று இருக்கிறது. தற்காலக் கட்டத்தில் உலகின் சிறந்த நான்கு வீரர்களில் ஒருவராக இருக்கும் அவருக்கு, அவர் விளையாடும் காலத்திலேயே ஒரு தொடரில் விளையாட இடம் கிடைக்காமல், கிரிக்கெட் வர்ணனை செய்யும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஐபிஎல் 2024.. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டிருக்கும் ஆங்கில கிரிக்கெட் வர்ணனையாளர்கள் :
ஸ்மித், பிராட், ஸ்டெய்ன், காலிஸ், டாம் மூடி, காலிங்வுட், கவாஸ்கர், லாரா, சாஸ்திரி, ஹைடன், பீட்டர்சன், கிளார்க், மஞ்ச்ரேக்கர், ஃபின்ச், பிஷப், நைட், கட்டிச், மாரிசன், மோரிஸ், பத்ரீ, கேட்டி, ஸ்வான், டீப் தாஸ்குப்தா, மபோவாங் போவ், அஞ்சும், முரளி கார்த்திக், ராமன், ரோஹன், கங்கா, ஹோவர்ட் மற்றும் ஜெர்மானோஸ்.
இதையும் படிங்க : இம்பேக்ட் பிளேயர் ரூலை வச்சி.. கேப்டன்சியில தோனி மாஸ் பண்ண போறாரு- அம்பதி ராயுடு தகவல்
ஐபிஎல் 2024.. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டிருக்கும் தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர்கள் :
ஸ்ரீகாந்த், பத்ரிநாத், லட்சுமிபதி பாலாஜி முரளி விஜய், முருகன் அஸ்வின், நாராயணன் ஜெகதீசன், ஆர்ஜே.பாலாஜி, யோ.மகேஷ், முத்துராமன் சத்தியநாராயணன், திருஷ்காமேனி, பாவனா பாலகிருஷ்ணன் மற்றும் சுவாஸ்திகா ராஜேந்திரன்