இதுவரை அவ்வளவாக வெளியே தெரியாத 7 கிரிக்கெட் சொந்தங்கள்

0
494
Faf du Plessis and Hardus Viljoen

உலகில் எத்தனை விளையாட்டுகள் பிரபலமாக இருந்தாலும், ஃபுட் பாலுக்கு அடுத்தபடியாக கிரிக்கெட் தான் தற்பொழுது மிகப் பெரிய பொழுது போக்கு விளையாட்டாகும். இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, சவுத் ஆப்பிரிக்கா, பங்களாதேஷ், வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாவே ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து போன்ற அணிகள் முன்னணி அணிகளாக அனைத்து கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகின்றனர்.

இந்த அணியில் இருக்கும் ஒரு சில வீரர்களின் உறவினர்களைப் பற்றி நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை அப்படி நாம் அவ்வளவாக அறிந்திராத வீரர்களின் உறவினர்களைப் பற்றி தற்போது பார்ப்போம்

- Advertisement -

அஸ்கர் அஃப்கன் மற்றும் கரிம் ஜனத் 

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் அஸ்கர் பல போட்டிகளில் ஆப்கானிஸ்டன் அணிக்காக மிகச்சிறந்த வகையில் தலைமை தாங்கியுள்ளார். அஸ்கர் உடைய சகோதரர் கழித்து எனது வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். அதேபோல அஸ்கர்  உறவினர் ஒருவர் வாக்கார்  ஆவார். அவர் அக்காலத்தில் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியில் விளையாடி உள்ளார்.

ரிக்கி பாண்டிங் மற்றும் கிரெக் கேம்ப்பெல் 

ரிக்கி பாண்டிங் பற்றி நாம் சொல்லி அனைவரும் தெரிய தேவை இல்லை ஆஸ்திரேலிய அணியின் சிறந்த பேட்ஸ்மேன் சிறந்த கேப்டன் அவர். அவரது மாமா கிரெக் கேம்ப்பெல் ஆவார். வேகப்பந்து வீச்சாளரான அவர் ஆஸ்திரேலிய அணிக்காக 12 ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஸ்டீவ் வாக் மற்றும் மார்க் வாக்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சகோதரர்களான ஸ்டீவ் மற்றும் மார்க் பற்றி சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இவர்கள் இருவரும் டிவின் சகோதரர்கள் ஆவார்கள். இவர்கள் இருவருமே ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி உள்ளனர், அதுவும் ஆஸ்திரேலியா பலமான அணியாக இருந்த பொழுது இவர்கள் இருவரும் அணியில் இருந்தார்கள் என்பதும் சிறப்பம்சமாகும்.

சச்சின் டெண்டுல்கருக்கு முன்னர் ஸ்டீவ் வாக் தான் அதிக டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதன் பின்னரே அந்த சாதனையை சச்சின் டெண்டுல்கரால் முறியடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முஷ்பிக்குர் ரஹிம் மற்றும் மகமதுல்லா

பங்களாதேஷை சேர்ந்த முஷ்பிகுர் ரஹிம் மற்றும் மகமதுல்லா இருவரும் பங்களாதேஷ் அணிக்கான முக்கியமான வீரர்கள். ரஹீம் பங்களாதேஷ் அணைக்காக 3 பார்மட்டிலும் தலைமை தாங்கியுள்ளார். அதேபோல தற்பொழுதும் மகமதுல்லா பங்களாதேஷ் அணிக்காக டி20 போட்டிகளில் தலைமை தாங்கி வருகிறார். இவர்கள் இருவரும் உறவினர்கள் என்பது பலருக்கும் தெரியாது.

பாபர் அசாம் மற்றும் அக்மல்  சகோதரர்கள் 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை வீரரும் தற்பொழுது உலகில் தலை சிறந்த வீரர்களில் ஒருவராக உருவெடுத்து வரும் பாபர் அசாம் கம்ரன் மற்றும் உமர் அக்மல் சகோதர்களின் உறவினர் ஆவார். அக்மல் சகோதரர்கள் பற்றி அனைவரும் அறிவார்கள் ஆனால் இவர்களது உறவினர் பாபர் அசாம் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

டுப்லஸ்ஸிஸ் மற்றும் வில்ஜோன்

தென்ஆப்பிரிக்க அணியின் சிறந்த பேட்ஸ்மேன் டு பிளசிஸ் ஆவார். அதேபோல தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளரான வில்ஜோன் டுப்லஸ்ஸிஸ் தங்கையை திருமணம் செய்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாது. இவர்களுடைய திருமண செய்தியை டுப்லஸ்ஸிஸ் சமூக வலைத்தளத்தில் பதிவு விட்டார். அதன் பின்னரே திருமணம் பற்றி பலருக்கும் தெரிய வந்தது.

பிரைன் லாரா மற்றும் டேரன் பிராவோ

வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேன் பிரைன் லாரா ஆவார். ஒரு டெஸ்ட் போட்டியில் 400 ரன்கள் அடித்த ஒரே வீரர் அவர் மட்டுமே. ஆனால் அவருடைய உறவினர் தான் டேரன் பிராவோ என்பது பலருக்கும் தெரியாது. இவர்கள் இருவரும் நெருங்கிய உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -