வெளிநாட்டு டி20 தொடரில் பங்கேற்க வாய்ப்புள்ள 3 இந்திய நட்சத்திர வீரர்கள்

0
699
Suresh Raina

நவீன கிரிக்கெட் உலகில் டி20 வடிவிலான தொடர்களுக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். உலகம் முழுக்க பல டி20 தொடர்கள் உள்ளன. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பேஷ் லீக், பாகிஸ்தான் பிரீமியர் லீக், கரீபியன் லீக் ஆகியவை பிரபலமானவை. வளர்ந்து வரும் டி20 தொடர்களில் இலங்கை பிரீமியர் லீக் மற்றும் இங்கிலாந்தில் நடக்கும் தி ஹன்ட்ர்ட் அடங்கும். அனைத்து டி20 தொடர்களுக்கும் ராஜா ஐ.பி.எல் தான். இந்தத் தொடரில் பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட்டர்கள் தவிர மற்ற அனைத்து வெளிநாட்டு வீரர்களும் கலந்து கொள்ள பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. ஆனால் இந்திய வீரர்கள் வெளிநாட்டு டி20 தொடரில் விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் சம்மதிப்பதில்லை.

இந்தியா தவிர மற்ற நாடுகளில் நடைபெறும் டி20 தொடரில் எதேனும் ஒரு இந்திய வீரர் விளையாட விரும்பினால் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். அடுத்து பிசிசிஐ ஒப்புக் கொண்ட பின்பே அவர் வெளிநாட்டு டி20 தொடரில் பங்கேற்க இயலும். விரேந்தர் சேவாக், யுவராஜ் சிங், யூசுப் பதான், ஜாகீர் கான், முனாப் படேல், மன்பிரீத் கோனி, சுதீப் தியாகி ஆகிய முன்னாள் நட்சத்திர வீரர்கள் தங்களது ஓய்வுக்குப் பின் வெளிநாட்டு டி20 தொடரில் விளையாடியுள்ளார். வரும் காலத்தில் இப்பட்டியலில் மேலும் சில வீரர்கள் இணைய வாய்ப்புள்ளது. அவர்களைப் பற்றி பின்வருமாறு காண்போம்.

- Advertisement -

சுரேஷ் ரெய்னா

பிசிசிஐ ஒப்பந்தத்தில் இடம்பெறாத வீரர்களை வெளிநாட்டு டி20 தொடரில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என சுரேஷ் ரெய்னா நேர்காணல் ஒன்றில் சென்ற ஆண்டு குறிப்பிட்டார். அவர் சொன்னதில் நிச்சயம் அர்த்தம் உண்டு. எம்.எஸ்.தோனி ஓய்வு பெற்ற அதே நேரம் அவரும் சர்வதேச கிரிக்கெட்டில் கூர்ந்து விலகினார். மேலும் ஐபிஎல் ஏலத்திலும் அவர் விலை போகவில்லை. இதனால் விரைவில் அவரை வெளிநாட்டு டி20 தொடர்களில் காணலாம்.

ஶ்ரீசாந்த்

இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஶ்ரீசாந்த் சமீபத்தில் தன் ஓய்வை அறிவித்தார். இந்த ஆண்டு ஏலத்திலும் அவரை வாங்க எந்த அணியும் விருப்பம் தெரிவிக்கவில்லை. அதையடுத்து அவர் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார். வெளிநாட்டு டி20 தொடர்களில் கலந்து கொள்ள விரும்புவதாக ஶ்ரீசாந்த் தெரிவித்தார். பிசிசிஐ அனுமதி அளித்தால் நிச்சயம் அவர் மற்ற டி20 தொடர்களில் விளையாடுவார்.

ஹர்பஜன் சிங்

விரைவில் நடக்கவிருக்கும் லெஜன்ட்ஸ் டி20 லீகில் ஹர்பஜன் சிங் கலந்து கொள்ள இருக்கிறார். கடைசியாக நடந்த மெகா ஏலத்திற்கு முன் வரை அவர் ஐபிஎல் தொடரில் விளையாடினார். உடல் தகுதி ஒத்துழைத்தால் அபுதாபி டி10 லீக், இலங்கை டி20 லீக் ஆகியவற்றில் அவர் பங்கேற்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

- Advertisement -