இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு வெஸ்ட்இன்டீஸ் பறந்திருக்கிறது. அங்கு முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று தொடரை 3-0 என வென்றது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது!
வெஸ்ட் இன்டீஸ் தொடர் முடிந்ததும் ஆகஸ்ட் மாதம் பிற்பகுதியில் யு.ஏ.இ-ல் நடக்கும் ஆசியக்கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. இதற்கு நடுவில் ஆகஸ்ட் 18, 20, 22 ஆகிய தேதிகளில் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட ஜிம்பாப்வே செல்கிறது.
இந்தத் தொடருக்கு ஷிகர் தவானை கேப்டனாக அறிவித்து, முன்னணி வீரர்கள் அனைவருக்கும் ஓய்வளித்து, இளம் இந்திய அணி ஒன்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் ராகுல் திரிபாதி முதல் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். தீபக் சாஹர் காயத்தில் இருந்து அணிக்குத் திரும்பியிருக்கிறார். ஆனால் எதிர்பார்க்கப்பட்ட மூன்று வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர்களைப் பற்றித்தான் இந்தக் கட்டுரை தொகுப்பில் பார்க்கப் போகிறோம்!
பிரித்வி ஷா
பிரித்வி ஷா இந்த முறை அதிர்ஷ்டம் இல்லாதவர். ஏனென்றால் நல்லமுறையில் ஐபிஎல் தொடரில் விளையாடியும், ரஞ்சி தொடரில் விளையாடியும் இவருக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. ரோகித், கே.எல்.ராகுல் தவிர இஷான் கிஷான், சுப்மன் கில், ருதராஜ் என மூன்று துவக்க ஆட்டக்காரர்கள் இருந்தாலும், சச்சின்-சேவாக் கலவையான ஓபனிங் பிளாஸ்டரான பிரித்வி ஷாவிற்கு இந்தத் தொடரில் வாய்ப்பு வழங்கி இருக்கலாம்!
அர்ஷ்தீப் சிங்
கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களாக இந்த இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஐபிஎல் தொடரில் பெரிதாய் கவனம் ஈர்த்தார். இதனால் செளத்ஆப்பிரிக்கா டி20 தொடரில் இடம் பெற்றவருக்கு, அந்தத் தொடரிலும் அயர்லாந்து தொடரிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அடுத்து இங்கிலாந்து தொடரில்தான் ஒருபோட்டாயில் வாய்ப்பு கிடைத்தது. அதனால் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாய்ப்பு வழங்கி இருக்கலாம்!
உம்ரான் மாலிக்
இந்தியாவின் அதிவேக பவுலரான இவர் விளையாடிய மூன்று டி20 போட்டிகளில் இவரது பவுலிங் 12.44 என்று அதிகமாய் இருக்கிறது. இவரது துவக்கம் சிறப்பாக அமையவில்லை. ஆனாலும் ஜிம்பாப்வே தொடரில் ஒரு வாய்ப்பை தந்து, அங்குள்ள மெதுவான ஆடுகளங்களில் இவரைப் பயன்படுத்தி இருக்கலாம்!