இந்தியாவிலிருந்து சென்று அமெரிக்கா அணிக்காக விளையாடும் கிரிக்கெட் வீரர்கள்

0
423
Saurabh Netravalkar USA

கிரிக்கெட் என்பது உலக அளவில் மிகவும் பிரபலம் ஆனது என்றாலும் நாளுக்கு நாள் பிரபலமாகாத நாடுகளிலும் அது பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்னர் 10 நாடுகள் மட்டுமே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த வேளையில் தற்போது 10க்கும் அதிகமான நாடுகள் கிரிக்கெட் விளையாட முன்வந்துள்ளனர்.

அதில் அமெரிக்க அணி சில ஆண்டுகளுக்கு முன்பு தங்களது கிரிக்கெட் எண்டிரியை கொடுத்தது. அந்த அணி அந்த நாட்டு வீரர்களை மட்டும் அல்லாமல் பல்வேறு நாடுகளிலிருந்து வீரர்களை தேர்வு செய்து அவர்களது அணியை அமைத்துக் கொண்டு வருகிறது.

- Advertisement -

இதற்கு முன்னரே டேன் பியடிட், ரஷ்டி தெரான், சமி அஸ்லம் மற்றும் கோரி ஆண்டர்சன் போன்ற முன்னணி வீரர்கள் தங்களது நாடுகளில் இருந்து அமெரிக்கா அணிக்காக விளையாட சென்று விட்டனர். அதைப்போல் இந்தியாவிலிருந்து ஒரு சில வீரர்கள் அமெரிக்க அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் அவர்களைப் பற்றி தற்போது பார்ப்போம்

சன்னி சோஹல்

சன்னி ஆரம்ப காலகட்டத்தில் பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடியவர். பின்னர் அங்கிருந்து டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாட தொடங்கினார். 2011ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெக்கான் அணிக்காக விளையாடியவர் சென்னை அணிக்கு எதிராக ஒரு அரை சதம் அடித்துள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.

- Advertisement -

அதன்பின்னர் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாட தொடங்கினார். அதன் பின்னர் ஐபிஎல் போட்டியில் அவ்வளவாக காணப்படாத இவர் தற்பொழுது அமெரிக்க அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கிறார் இதுவரை அமெரிக்க அணைக்காக 3 டி20 போட்டியில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிமில் பட்டேல்

டிமில் இந்தியாவைச் சேர்ந்தவர். இந்தியாவில் உள்ள அகமதாபாத்தைச் சேர்ந்த குஜராத் மாநிலத்தில் பிறந்தார். வலதுகை பேட்ஸ்மேன் ஆன டிமில் பவுலிங்கும் சிறப்பாக போடுவார்.

முன்னாள் அண்டர் 19  இந்திய வீரரான இவர் தற்பொழுது அமெரிக்கா அணியில்  இணைந்து விளையாடி வந்து கொண்டிருக்கிறார் இதுவரை 7 ஒரு நாள் போட்டிகளிலும் 7 டி20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிசர்க் பட்டேல்

அகமதாபாத்தைச் சேர்ந்த பட்டேல் வலதுகை பேட்ஸ்மேன் ஆவார். கூடுதலாக இவர் இடது கை ஸ்பின் பவுலர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் விளையாட அவ்வளவாக வாய்ப்பு கிடைக்காத நிலையில் அமெரிக்க அணிக்காக விளையாடி வருகிறார்.

2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர் அமெரிக்க அணிக்காக முதல் சர்வதேச போட்டியில் விளையாடினார். இதுவரை 8 ஒருநாள் போட்டிகளில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் அதேபோல அமெரிக்க அணியில் அதிக ஸ்கோர் (52) எடுத்த வீரரும் இவரே.

கரண் விரடியா 

கரன் குஜராத்தை சேர்ந்த வீரர் ஆவார். சூரத் என்கிற ஊரில் பிறந்த இவர் இந்தியாவுக்காக அண்டர் 19 தொடரில் விளையாடியவர். 2013ம் ஆண்டு வயது பொய்யாக கூறிய குற்றச்சாட்டுக்காக இவர் உள்ளானார்.

அதன் பின்னர் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு சென்று தற்போது அங்கே அமெரிக்க அணியில் இணைந்து விளையாடி வந்து கொண்டிருக்கிறார். அண்மையில் அவர் அமெரிக்கா அணியில் விளையாடும் வீரர்கள் பட்டியலில் இணைந்து பயிற்சி பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சௌரப் நெற்றவல்கர்

மும்பையைச் சேர்ந்த சவரம் வேகப்பந்து வீச்சாளர் ஆவார் இவரும் இந்தியாவுக்காக அண்டர் 19 தொடரில் விளையாடி அவர் அதுமட்டுமல்லாமல் மும்பை அணிக்காக பலர் உள்ளூர் ஆட்டங்களில் விளையாடி உள்ளார்.

அதன் பின்னர் இந்தியாவிலிருந்து வெளியேறி அமெரிக்காவுக்குச் சென்று அங்கே அமெரிக்கா அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார். குறிப்பாக ஒரு ஒரு4 நாள் போட்டியில் வெறும் 32 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அமெரிக்கா அணியில் மத்தியில் நல்ல பெயரை வாங்கி உள்ளார். இதுவரை இவர் 13 ஒருநாள் போட்டிகளிலும் எட்டு டி20  போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.