லீக் சுற்றோடு வெளியேறிய பாகிஸ்தான் அணி.. தோல்விக்கான முக்கிய மூன்று காரணங்கள்.. முழு விபரம்

0
685

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒரு சோக செய்தியாக பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கத் தகுதி பெறாமல் லீக் சுற்றோடு வெளியேறி இருக்கிறது.

லீக் சுற்றில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி, கனடா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றாலும் அமெரிக்க அணி ஏற்கனவே இரண்டு வெற்றிகளை பெற்றிருந்ததாலும் மேலும் ரன் ரேட்டின் அடிப்படையிலும் பாகிஸ்தான் அணி லீக் சுற்றோடு வெளியேறி இருக்கிறது.

- Advertisement -

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களே பாகிஸ்தான் அணியின் மோசமான தோல்விகளின் காரணமாக தங்கள் அணிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது நிறுத்தி விட்டனர் என்றும் கூறப்படுகிறது. எனவே பாகிஸ்தான் அணியின் தோல்விகளுக்கு மிக முக்கியமான மூன்று காரணங்கள் குறித்து காண்போம்.

முதலாவதாக பாகிஸ்தான் அணியின் பேட்டிங் மிக மோசமாக உலகக்கோப்பை தொடரில் அமைந்திருக்கிறது. ஒரு சிலரை தவிர அணியில் அதிக ஸ்ட்ரைக் ரைட்டில் விளையாடக்கூடிய பேட்ஸ்மேன் என்று யாருமே இல்லை. டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை ஸ்டிரைக் ரேட் என்பது மிகவும் முக்கியம். குறிப்பாக இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 119 ரன்கள் இலக்கை கூட பாகிஸ்தான் அணியால் சேசிங் செய்ய முடியவில்லை.

இரண்டாவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியதில் இருந்து ஃபீல்டிங் என்பது ஒரு முக்கிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இதை டி20 உலக கோப்பை தொடரிலும் பீல்டிங் சொதப்பல்கள் அப்படியே எதிரொலித்தது. கேட்ச்களை விடுவது, ரன் அவுட் தவற விடுதல், மோசமான மிஸ் பீல்டு இவையெல்லாம் முக்கிய காரணமாகும். குறிப்பாக அமெரிக்க அணிக்கு எதிரான சூப்பர் ஓவரில் மோசமான பீல்டிங் காரணமாக 18 ரன்கள் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மூன்றாவதாக பாகிஸ்தான் அணியில் மோசமாக கேப்டன்சி செய்த பாபர் ஆசம். ஏற்கனவே டி20 கிரிக்கெட்டுக்கு கேப்டனாக இருந்த ஷாஹின் சா அப்ரிடியை நீக்கிவிட்டு டி20 உலக கோப்பைக்காகவே பாபர் ஆசமை கேப்டனாக நியமித்தனர். ஆனால் அவரது கேப்டன்ஷிப் எதிர்பார்த்த அளவு அவருக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுக்கவில்லை. குறிப்பாக அமெரிக்க அணிக்கு எதிரான சூப்பர் ஓவரை அப்ரிடிக்கு வழங்காமல் முகமது அமீருக்கு வழங்கியது அப்போதே பெரிய விவாதத்தை கிளப்பியது.

இதையும் படிங்க:ரோகித் சர்மா மற்றும் கில் இடையே விரிசலா.. இந்தியா திரும்பும் சுப்மன் கில்.. காரணம் என்ன.?

மேலும் அணிக்குள் நிலவும் அமைதியற்ற சூழ்நிலை, போட்டியின் போது களத்தில் வீரர்களுக்கிடையே எந்த பேச்சு வார்த்தையும் இல்லாதது போன்றவை முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி மட்டுமல்லாமல் நியூசிலாந்து, இலங்கை போன்ற முன்னணி அணிகளும் லீக் தொடரிலேயே வெளியேறி இருப்பது வருத்தத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது