அஸ்வின் பந்தை வாங்க மறுத்த காரணம் என்ன?.. மைதானத்தில் என்ன சொன்னார்? – குல்தீப் வெளியிட்ட விஷயம்

0
581
Kuldeep

மார்ச்-7. இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தரம்சாலா மைதானத்தில் நடைபெற்று வரும் ஐந்தாவது போட்டியில், முதல் நாளான இன்று இரண்டாவது செஷனிலேயே குல்தீப் யாதவ் ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியிருந்தார்.

தரம்சாலா மைதானத்தில் குளிரான சூழ்நிலை காணப்பட்டதால், வேகப்பந்துவீச்சுக்கான சாதகங்கள் இருந்தது. இந்திய வேகப்பந்துவீச்சாளர்களிடம் இருந்து நல்ல பந்துகள் வந்தாலும் கூட, அவை விக்கெட்டுகளாக மாறும் அதிர்ஷ்டம் இன்று அவர்களுக்கு இல்லை.

- Advertisement -

இந்த நிலையில் குல்தீப் யாதவ் மிகச் சிறப்பாக செயல்பட்டு பென் டக்கெட், ஜாக் கிரவுலி, ஒல்லி போப், ஜானி பேர்ஸ்டோ மற்றும் பென் ஸ்டோக்ஸ் என இங்கிலாந்து அணியின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, அந்த அணியின் சரிவுக்கு மிக முக்கிய காரணமாக இருந்தார்.

இங்கிலாந்து அணி 100 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து இந்த டெஸ்ட் போட்டியிலும் வலிமையான இடத்தில் இருந்து கோட்டை விட்டது. ஆனாலும் இந்த முறை இங்கிலாந்து தவறு செய்தது என்று சொல்வதை விட, குல்தீப் யாதவ் மிகச் சிறப்பாக பந்து வீசினார் என்று கூற வேண்டும்.

பேட்டிங் செய்வதற்கு மிக சாதகமான முதல் நாள் தரம்சாலா ஆடுகளத்தில் பந்தை சரியான இடத்தில் தரை இறக்கி, பந்தில் நல்ல சுழற்சியை கொடுத்து, மேலும் பந்தில் வேகத்தில் மாற்றங்கள் செய்து, வேரியேஷன்களும் கொண்டுவந்து பிரமாதப்படுத்தியிருந்தார். இதற்குப் பின் வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றி இங்கிலாந்து அணியை ஆல் அவுட் செய்ய உதவினார்.

- Advertisement -

நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு குல்தீப் யாதவ் பந்தை கொடுத்து முன்னே செல்லுமாறு கூறினார். ஆனால் ஐந்து விக்கெட் எடுத்திருந்த குல்தீப் யாதவ் தான் முன்னே செல்ல வேண்டும் என்று பந்தை வாங்க ரவிச்சந்திரன் அஸ்வின் மறுத்துவிட்டார்.

இதுகுறித்து போட்டிக்குப் பின்பு பேசிய குல்தீப் யாதவ் கூறும் பொழுது ” நான் அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரிடம் இருந்தும் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். அவர்கள் களத்தில் எனக்கு நிறைய ஆலோசனைகள் தருகிறார்கள். அவர்கள் மிகச் சிறப்பான வீரர்கள்.

இதையும் படிங்க : 135-1.. பாஸ்பால் ஆடிய ரோகித்-ஜெய்ஸ்வால் அதிரடி அரைசதம்.. முதல் நாளே சம்பவம் செய்த இந்திய அணி

நான் அஸ்வினிடம் வந்து கொடுத்து முன்னே செல்லுமாறு கூறிய பொழுது ‘என்னிடம் இதுபோல 35 பந்துகள் இருக்கிறது. எனவே இந்த பந்தை நீயே வைத்துக்கொள், முன்னாள் செல்” என்று அவர் கூறினார்” என்று கூறியிருக்கிறார்.