கோலி பவுலிங் போடட்டும்.. 11 பேட்ஸ்மேன் வச்சு ஆடுங்க – ஸ்ரீகாந்த் ஆர்சிபி மீது விமர்சனம்

0
295

நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 30-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தியது. இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஸ்ரீகாந்த் ஆர்சிபி அணியை விமர்சித்துள்ளார்.

முதல் இன்னிங்ஸில் பெங்களூர் அணி 287 ரன்கள் விட்டுக் கொடுத்ததை தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஆன கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விராட் கோலி பந்து வீசி இருந்தால் கூட இவ்வளவு ரன்கள் கொடுத்திருக்க மாட்டார் என்று காட்டமாகக் கூறியிருக்கிறார்.

- Advertisement -

நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணியின் மேக்ஸ்வெல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் களமிறக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து பேட்டிங்க்கு சாதகமான பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 287 ரன்களை குவித்தது.

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தனது முந்தைய சாதனையான 277 ரன்களையும் இதே ஹைதராபாத் அணி முறியடித்தது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு ஆர்சிபி அணியின் பந்துவீச்சு மிகவும் மோசமானதாக இருந்தது. ஒரு அணியில் நான்கு பவுலர்கள் 50 ரன்கள் விட்டுக் கொடுத்த ஒரே அணி என்ற பெருமையை ஆர்சிபி நேற்று பெற்றது.

ஸ்ரீகாந்த் ஆர்சிபி மீது விமர்சனம்

பெங்களூர் அணியின் பந்துவீச்சு குறித்து தனது யூடியூப் சேனலில் விராட் கோலி பந்து வீசி இருந்தால் கூட தனது சாமர்த்தியத்தை பயன்படுத்தி நன்றாக வீசி இருப்பார் என்றும் ஆர்சிபி அணியின் நிர்வாகத்தை ஸ்ரீகாந்த் சாடியுள்ளார் இது குறித்த அவர் கூறும் பொழுது “ரீஸ் டாப்லீ தனது பந்துவீச்சில் அடி வாங்குகிறார். லாக்கி பெர்குஷன் அடி வாங்குகிறார். பெர்குசன் ஐபிஎல் பயணம் இதுவரை சிறந்ததாக இருந்தது இல்லை. அவர் வேறு வேறு அணிகளுக்கு விளையாடிவிட்டார். வில் ஜாக்சின் பந்துவீச்சு மட்டுமே ஓரளவு சிறப்பாக இருந்தது. இல்லையெனில் ஆர்சிபி 11 பேட்ஸ்மேன்களை வைத்து மட்டுமே விளையாடலாம்.

- Advertisement -

பாப் டுப்ளசிஸ் இரண்டு ஓவர்கள் வீசலாம். கேமரூன் கிரீன் இரண்டு ஓவர்கள் வீசலாம். விராட் கோலி 4 ஓவர்கள் வீசி இருந்தால் கூட தனது சாமர்த்தியத்தை பயன்படுத்தி ஓரளவு நன்றாக வீசி இருப்பார் இவ்வளவு ரகளை விட்டுக் கொடுத்திருக்க மாட்டார். ஒரு கட்டத்தில் விராட் கோலி மைதானத்தின் மேற்கூரைகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார். ஹைதராபாத் அணியினர் ஆர்சிபி பந்துவீச்சை அடித்து நொறுக்கினார்கள். இவ்வளவு ரன்கள் விட்டுக் கொடுத்ததை பார்த்துவிட்டு விராட் கோலி கோபத்துடனே பேட்டிங் செய்து வெளியே வந்தார்.

இதையும் படிங்க:ஒரு நாள் கூட ஆடிக்கோங்க.. சிஎஸ்கே முஸ்தபிசுர் ரஹ்மான் கிளம்பும் தேதி.. பங்களாதேஷ் கிரிக்கெட் அறிவிப்பு

அந்த அளவிற்கு கிளாஸன் அடித்து நொறுக்கி விட்டார். மேக்ஸ்வெல் மற்றும் முகமது சிராஜை உட்கார வைத்தார்கள். 11.5 கோடிக்கு வாங்கப்பட்ட அல்சாரி ஜோசப்பை உட்கார வைத்தார்கள். 17.5 கோடிக்கு வாங்கப்பட்ட கேமரா கிரீனை உட்கார வைத்தார்கள். இந்த ஆர்சிபி அணிக்கு எனது ஹேட்ஸ் ஆப். எந்தத் திட்டமும் இல்லாமல் ஏலத்திற்கு சென்றதற்காக நான் ஆர்சிபி நிர்வாகத்தை மட்டுமே குறை கூறுகிறேன், வீரர்களை கூறவில்லை”என்று கூறியிருக்கிறார்.