நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய ஆறு போட்டிகளில் நான்கு போட்டிகள் வெற்றி பெற்று இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவி தற்போது புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் முஸ்தபிசுர் ரஹ்மான் ஐபிஎல்லில் கிளம்பும் தேதியில் இருந்து ஒரு நாள் கூடுதலாக விளையாட வங்காளதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.
ஐபிஎல்லில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் தோல்வியைத் தழுவியது. பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியிருக்கிறது.
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது வங்காளதேச வீரரான முஸ்தபிசுர் ரஹ்மான் வருகிற டி20 உலக கோப்பையில் பங்கேற்க, தனது விசாவை புதுப்பிக்க வேண்டிய காரணத்தால் வங்காளதேசத்துக்கு சென்று இருந்தார். சென்னை அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஆன இவர் இல்லாததால் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவியது.
இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள முஸ்தபிசுர் ரஹ்மான் சென்னை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்கிறார். பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 29 ரன்களை விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியது இவரது சிறந்த பந்துவீச்சாக அமைந்தது. மேலும் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களின் பட்டியலில் பும்ரா மற்றும் சகால் (11 விக்கெட்)ஆகியோருக்கு பிறகு இரண்டாவது இடத்தில் இருக்கிறார் (10 விக்கெட்).
முஸ்தபிசுர் ரஹ்மான் கிளம்பும் தேதி
இந்த நிலையில் முஸ்தபிசுர் ரஹ்மான் இந்தியாவில் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை மட்டுமே தங்குவதற்கான அட்டவணையை வங்காளதேச கிரிக்கெட் வாரியம் அமைத்திருந்தது. ஏனெனில் வருகிற டி20 உலக கோப்பைக்கு தயாராகும் விதமாக மே 3ஆம் தேதி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்பதற்காக வங்காளதேசம் திரும்ப வேண்டும். இந்த நிலையில் மே 1ஆம் தேதி பஞ்சாப் அணியுடன் போட்டி இருப்பதால் பிசிசிஐ இன் கோரிக்கையை ஏற்று ஒரு நாள் கூடுதலாக தங்குவதற்கான அனுமதியை அளித்துள்ளது.
இதுகுறித்து வங்காளதேச கிரிக்கெட் வாரியம் விரிவாக கூறிய அறிக்கையில் “முஸ்தபிசுருக்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை மட்டுமே ஐபிஎல் விளையாட அனுமதி அளித்திருந்தோம். ஆனால் சென்னையில் மே 1ஆம் தேதி பஞ்சாப் அணியுடன் போட்டியிருப்பதால் சென்னை நிர்வாகம் மற்றும் பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்று அவரது விடுமுறையை ஒரு நாள் நீட்டித்துள்ளோம்” என்று கூறி இருக்கிறது.
இதையும் படிங்க: இனி எல்லா போட்டியும் நமக்கு செமி பைனல் தான் – தோல்விக்கு பின் ஆர்சிபி கோச் பேட்டி
இதற்குப் பின்னர் மே 3ஆம் தேதி முதல் மே 12ஆம் தேதி வரையிலான ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வங்காளதேசம் விளையாடிகிறது. அதற்குப் பிறகு மே 21ஆம் தேதி முதல் அமெரிக்கா அணி யுடன் மூன்று டி20 தொடரில் பங்கேற்க இருக்கிறது.