தோனி விராட் கோலி போட்டு கொடுத்த அந்த ரூட்லதான் விளையாடினேன்.. சங்கக்கராவும் அதையே சொன்னார் – ஜோஸ் பட்லர் பேட்டி

0
561
Buttler

இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தனி வீரராக பேட்டிங்கில் சதம் அடித்து ஜோஸ் பட்லர், அந்த அணியை வெற்றி பெற வைத்திருக்கிறார். இன்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற அவர் தோனி விராட் கோலி வழியை பின்பற்றியதாக கூறியிருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு, மற்ற வீரர்கள் பெரிய பங்களிப்பு செய்யாத போதிலும் கூட, சுனில் நரைன் தனி வீரராக சிறப்பாக விளையாடி 59 பந்துகளில் 109 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அந்த அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் சேர்த்தது. அவருக்கு இது முதல் டி20 சதமாக அமைந்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரியான் பராக் அதிரடியாக 14 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் ரோமன் பவர் 13 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். அந்த அணியின் வெற்றிக்கு கடைசி ஆறு ஓவர்களில் 96 ரன்கள் தேவைப்பட்டது. எனவே கொல்கத்தா அணி வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்புகள் இருந்தது.

இந்த நிலையில் தனி வீரராக கடைசி ஆறு ஓவர்களுக்கும் போராடிய ஜோஸ் பட்லர் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்று விளையாடி, கடைசிப் பந்தில் பவுண்டரி அடித்து கொல்கத்தா அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெல்ல வைத்தார். அவர் 60 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 107 ரன்கள் எடுத்தார்.

வெற்றிக்குப் பின் ஆட்டநாயகன் விருது பெற்ற ஜோஸ் பட்லர் பேசும் பொழுது “நம்பிக்கையுடன் இருப்பது மட்டுமே வெற்றிக்கான சாவியாக அமைகிறது. நான் ரிதத்திற்கு வருவதற்கு கொஞ்சம் சிரமப்பட்டேன். அப்படியான நேரங்களில் நாம் கொஞ்சம் விரக்தி அடைகிறோம். அல்லது அந்த நேரத்தில் உங்களை நீங்களே கேள்வி கேட்டுக் கொள்கிறீர்கள். எனக்கு நானே பரவாயில்லை என்று சொல்லிக் கொள்கிறேன். நான் என்னை அமைதியாக வைத்துக் கொள்ள முயற்சி செய்தேன்.

- Advertisement -

இதையும் படிங்க : 36 பந்து 96 ரன்.. பட்டையை கிளப்பிய பட்லர்.. ரன் சேஸ் மெகா சாதனை.. ராஜஸ்தான் கேகேஆர் அணியை வென்றது

ஐபிஎல் தொடரில் பலமுறை மிகவும் விசித்திரமான கடைசிநேர சம்பவங்கள் நடந்து நாம் பார்த்திருக்கிறோம். தோனி மற்றும் விராட் கோலி போன்றவர்கள் நம்பிக்கை உடன் கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடிப்பதை பார்த்திருக்கிறோம். இன்று நான் அவர்கள் வழியில்தான் விளையாடி ஆட்டத்தை முடித்தேன். சங்ககாரா எப்பொழுதும் என்னை போராடும் பொழுது விக்கெட்டை கொடுக்காமல் நின்று விளையாடினால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்து கொண்டே இருக்கும் என்று கூறுவார். கடந்த சில வருடங்களாக நான் இப்படித்தான் விளையாடுகிறேன். கண்டிப்பாக இது என்னுடைய சிறந்த டி20 இன்னிங்ஸ் ஆக நான் உணர்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.