தோனிக்கு சிறப்பு மரியாதை தந்த கேஎல்.ராகுல்.. களத்தில் நெகிழ்ந்து போன ரசிகர்கள்.. அற்புதமான சம்பவம்!

0
391
Rahul

நேற்று லக்னோ மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி கேஎல்.ராகுல் சிறப்பான பேட்டிங்கால் வெற்றி பெற்றது. மேலும் நேற்றைய போட்டியில் தோனிக்கு கேஎல்.ராகுல் தந்த மரியாதை அனைவரையும் மகிழ்ச்சி படுத்தி இருக்கிறது.

நேற்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணிக்கு முக்கிய பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்கவில்லை. ரவீந்திர ஜடேஜா 40 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து இரண்டு ஓவர்கள் முழுமையாக இருக்கும் பொழுது களம் இறங்கிய தோனி 8 பந்துகளில் அதிரடியாக 28 ரன்கள் குவித்தார். இதன் காரணமாக சிஎஸ்கே அணி ஆரம்பிக்கக் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

தொடர்ந்து விளையாடிய லக்னோ அணிக்கு முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் 130 ரன்கள் வந்தது. போட்டி ஏறக்குறைய அந்த இடத்திலேயே முடிந்துவிட்டது. கேப்டன் கேஎல்.ராகுல் 53 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார். நேற்றைய போட்டியில் அவரே ஆட்டநாயகன் விருதையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நேற்று லக்னோ மைதானத்தில் லக்னோ அணிக்கு இருந்த ஆதரவை விட சிஎஸ்கே அணிக்கு இருந்த ஆதரவுதான் மிக அதிகமாக இருந்தது. மைதானத்திற்கு உள்ளே மட்டும் இல்லாமல், போட்டி துவங்குவதற்கு முன்பு மைதானத்தின் வெளியிலேயும் பெரிய மஞ்சள் கடல் போல ரசிகர்கள் இருந்தார்கள். அவர்கள் சிஎஸ்கே அணியினர் வந்த பேருந்தை உள்ளே அனுமதிப்பதற்கு நேரம் எடுத்தது.

இந்த நிலையில் நேற்று போட்டி முடிந்ததும் இரண்டு அணிகள் கேப்டன்களும் கைகுலுக்கி கொண்டனர். ருதுராஜ் கேஎல்.ராகுலிடம் கைகுலுக்கி நகர, அந்த வரிசையில் அடுத்து தோனி வந்தார். உடனே தன்னுடைய தொப்பியை கழட்டிய கேஎல்.ராகுல் தோனிக்கு சிறப்பு மரியாதை செய்து கைக்குலுக்கினார்.

- Advertisement -

இதையும் படிங்க : நான் லாரா காலத்தில் விளையாடல.. ஆனா தோனி ரூபத்துல பாக்கறேன்.. அவர் தேசிய ஹீரோ – பூரன் நெகிழ்ச்சி பேட்டி

தொப்பியை கழற்றி ஒருவரிடம் கைகுலுக்குவது என்பது விளையாட்டில் ஒரு வீரருக்கு கொடுக்கும் பெரிய மரியாதை என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று கேஎல்.ராகுல் இந்த வகையில் தோனியை பெருமைப்படுத்தியது, மைதானத்தில் இருந்த ரசிகர்களையும், வெளியில் இருக்கும் ரசிகர்களையும் மிகவும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.