நான் லாரா காலத்தில் விளையாடல.. ஆனா தோனி ரூபத்துல பாக்கறேன்.. அவர் தேசிய ஹீரோ – பூரன் நெகிழ்ச்சி பேட்டி

0
3637
Pooran

நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக தோனி பேட்டிங் செய்யும் ஒவ்வொரு முறையும், அவருக்காக ரசிகர்கள் ஆர்ப்பரிக்கும் சத்தத்தை விட, அவர் பேட்டிங்கில் காட்டும் அதிரடி சிறப்பாக அமைந்திருக்கிறது. அது எதிரணி வீரர்களையும் கவர்வதாக இருக்கிறது. இந்த வகையில் லக்னோ அணியின் நிக்கோலஸ் பூரன் தோனியை மிகப்பெரிய அளவில் புகழ்ந்து பேசி இருக்கிறார்.

சிஎஸ்கே அணி லக்னோ அணிக்கு முன்பாக மும்பை அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில், தோனி வெறும் நான்கு பந்துகளை மட்டுமே சந்தித்து, ஹர்திக் பாண்டியாவின் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 20 ரன்கள் எடுத்து ஆச்சரியப்படுத்தினார். அதற்கு முன்பாக டெல்லி அணிக்கு எதிராகவும் பெரிய ஸ்ட்ரைக் ரேட்டில் அதிரடி காட்டி இருந்தார்.

- Advertisement -

மேலும் இன்று லக்னோ அணிக்கு எதிராக பேட்டிங் செய்த தோனி வெறும் 8 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 28 ரன்கள் குவித்தார். இவரது அதிரடியின் காரணமாகவே 160 ரன்களுக்குள் கட்டுப்பட்டு இருக்க வேண்டிய சிஎஸ்கே அணி, 176 என்கின்ற சவாலான ஸ்கோருக்கு சென்றது.

இன்று லக்னோ அணிக்கு எதிரான போட்டியிலும் வழக்கம்போல் தோனி பேட்டிங் செய்ய வந்த பொழுது ரசிகர்களின் உற்சாகமான ஆரவாரம் மைதானத்தை அதிர செய்தது. மேலும் இந்தப் போட்டியில் லக்னோவில் நடந்தாலும் கூட, தோனிக்கு பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் கூடி இருந்தது. மேலும் மைதானத்திற்கு வெளியில் சிஎஸ்கே பேருந்து வந்த பொழுது கூட, மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் தோனிக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இதுகுறித்து லக்னோ அணியின் துணை கேப்டன் நிக்கோலஸ் பூரன் கூறும் பொழுது “இந்த சீசன் மட்டும் கிடையாது. கடந்த சீசனிலும் கூட தோனி பேட்டிங் செய்ய வரும் பொழுது, பெரிய அளவில் மஞ்சள் கடல் போல ரசிகர்கள் குவிந்திருந்தார்கள். அதைப் பார்ப்பதற்கே மிகவும் ஆச்சரியமாக இருந்தது. தோனி ஒரு தேசிய ஹீரோ!

- Advertisement -

இதையும் படிங்க : தல தோனி என்ட்ரி .. குயின்டன் டி காக் மனைவி வாட்ச் வரை வந்த பிரச்சனை.. அவரே வெளிட்ட தகவல்

பிரையன் லாராவின் காலத்தில் நான் விளையாடவில்லை. தோனியின் மூலமாக அப்படிப்பட்ட ஒன்றை பார்ப்பது மிகவும் நன்றாக இருக்கிறது. அவருக்கு அதிதீவிரமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருடன் இணைந்து களத்தில் விளையாடுவது மற்றும் விஷயங்களை பகிர்ந்து கொள்வது குறித்து, நாம் நம் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு பெருமையாக கூற முடியும்” என்று புகழ்ந்து பேசி இருக்கிறார்.