“ICC என்னால முடியல.. இதுக்கு மட்டும் புது ரூல்ஸ் கொண்டு வாங்க” – ஸ்டீவ் ஸ்மித் புலம்பல் கோரிக்கை

0
345
Smith

விளையாட்டுகளில் பொருத்தவரை கிரிக்கெட் தன்னை எந்த அளவிற்கு மாற்றிக் கொள்ள முடியுமோ அந்த அளவிற்கு மாற்றிக் கொண்டிருக்கிறது.

கால அளவே கிடையாமல் இரண்டு அணிகளும் ஆல் அவுட் ஆகும் வரையில் விளையாடப்பட்ட கிரிக்கெட் இன்று 10 ஓவர் வடிவத்திற்கும் வந்துவிட்டது. ஐசிசி தற்பொழுது அதிகாரப்பூர்வமாக மூன்று வடிவில் கிரிக்கெட் போட்டிகளை நடத்திக் கொண்டு வருகிறது.

- Advertisement -

இந்த மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளுக்கும் தனித்தனி பீல்டிங் விதிமுறைகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. சமீபத்தில் கூட ரன் அவுட் முறையில் விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டன.

இப்படி கிரிக்கெட் காலத்திற்கு தகுந்தபடி தன் வடிவத்திலும், தன் விதிமுறைகளிலும் எவ்வளவு மாற்றம் தேவையோ அவ்வளவு மாற்றங்களை செய்து கொண்டு மிக வேகமாக உலகெங்கும் பரவி வரும் விளையாட்டாக மாறி இருக்கிறது.

இந்த நிலையில் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு கிரீசின் இடதுபுறத்தில் அதாவது லெஃப்ட் சைடு இருந்து வீசப்படும் பவுன்சர் பந்துகளுக்கு அளவு வைத்து, அதற்கு மேல் வீசப்படும் அப்படியான பந்துகளை வைடு என அறிவிக்க வேண்டும் என ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியிருக்கிறார்.

- Advertisement -

நியூசிலாந்தின் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான நீல் வாக்னர் 2016 மற்றும் 2019 டெஸ்ட் தொடர்களில் இந்த வகையில் பவுன்சர்களாக வீசி ஸ்மித்தை தடுமாற வைத்து ஐந்து முறை வீழ்த்தி இருக்கிறார். மேலும் இவருக்கு எதிராக ஸ்மித் வெறும் 16 ரன் ஆவரேஜ்தான் வைத்திருக்கிறார். தற்பொழுது நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாகவே நீல் வாக்னர் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் இப்படியான பந்துவீச்சு குறித்து பேசி உள்ள ஸ்மித் கூறும் பொழுது ” நீங்கள் இப்படியான பந்து வீச்சுக்கு ஃபீல்டிங் செட் செய்யும் பொழுது, இதற்கென விதிகளில் கொஞ்சம் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன்.

இந்த வகையில் பந்து வீசும் பொழுது உங்களால் விக்கெட்டுக்கு முன்புறம் எங்கும் பந்தை அடிக்கவே முடியாது. ஒரு வலது கை பேட்ஸ்மேனுக்கு இடது பக்கமாக இருந்து இடதுகை சுழற் பந்துவீச்சாளர் தொடர்ச்சியாக பந்து வீசுவது போல தான் இதுவும்.

எனவே இப்படி வலதுகை இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு அவர்களுக்கு இடது புறத்தில் இருந்து வீசப்படும் பவுன்சர் பந்துகள் இரண்டு மட்டுமே அனுமதிக்க வேண்டும். அதற்கு மேல் வீசப்பட்டால் டெஸ்ட் கிரிக்கெட்டில் வைட் என அறிவிக்க வேண்டும்.

இதையும் படிங்க : ஸ்ரேயாஸ் இஷான் ஓகே.. ஹர்திக் பாண்டியா மேல கை வைப்பிங்களா?” – இர்பான் பதான் பிசிசிஐ-கு நேரடி கேள்வி

நீல் வாக்னர் மிகவும் திறமையான வேகப்பந்துவீச்சாளர். அவர் இந்த வகையில் பந்து வீசுவதில் மிகவும் திறமையாக செயல்பட்டு இருக்கிறார். அவர் மார்புக்கும் இடுப்புக்கும் குறிவைத்து துல்லியமாக வீசிக்கொண்டே இருப்பார்” எனக் கூறியிருக்கிறார்.