ரோஹித் ஹர்திக்கை பழிவாங்க நினைக்கல.. அவர் நினைக்கிற விஷயமே வேற – மைக்கேல் கிளார்க் பேட்டி

0
34
Clarke

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை கொண்டு வந்து, பழைய கேப்டன் ரோஹித் சர்மாவை அந்த அணி நிர்வாகம் நீக்கியது. ஆனாலும் டி20 உலக கோப்பை இந்திய அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மாவும் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் இருக்கிறார்கள். இது குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பேசியிருக்கிறார்.

தற்போது டி20 உலகக்கோப்பைக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணியில் ரிங்கு சிங் இல்லாதது பெரிய அதிர்ச்சியான விஷயமாக அமைந்தது. அதேபோல் ஹர்திக் பாண்டியா அணியில் சேர்க்கப்பட்டதும் இல்லாமல் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டது எல்லோருக்கும் ஆச்சரியத்தை கொடுத்து இருக்கிறது.

- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என ஹர்திக் பாண்டியா செயல்பாடு மிகவும் சுமாராக இருந்தது. அத்தோடு அவரது கேப்டன்சி அதைவிட சுமாராக இருந்தது. இப்படியான நிலையில்தான் அவரை டி20 உலகக்கோப்பை இந்திய அணிக்கு தேர்வு செய்தது மட்டுமில்லாமல் துணை கேப்டன் ஆகவும் அறிவித்திருக்கிறார்கள்.

இது குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறும் பொழுது ” ரோகித் சர்மாவை பற்றி நாம் புரிந்து கொண்டால், அவர் ஹர்திக் பாண்டியாவை அரவணைத்துக் கொள்வார். ரோகித் சர்மா இந்த உலகக் கோப்பையை வெல்ல விரும்புகிறார்.அவர் இந்திய அணியின் கேப்டன். தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியை பார்க்கும் பொழுது ரோகித் சர்மாவின் எண்ணம் புரிகிறது.

- Advertisement -

ரோகித் சர்மாவுக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கும் இடையில் பெரிய மன விலகல் இருப்பதாக மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அப்படியே ஏதாவது இருந்திருந்தால், நிச்சயமாக ஹர்திக் பாண்டியா தற்போது டி20 உலக கோப்பை இந்திய அணியில் இருந்திருக்கவே மாட்டார்.

இதையும் படிங்க : டி20 உலககோப்பை.. இந்திய அணிக்கு மேத்யூ ஹைடன் தந்த மாஸ் ஐடியா.. கப் அடிக்கலாம் போலயே

ரோகித் சர்மாவின் அதிகாரம் பெரியது. அவர் நினைத்தால் ஹர்திக் பாண்டியாவை தேர்வு செய்ததில் தலையிட்டு இருக்க முடியும். ஆனால் இங்கு ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டதோடு துணை கேப்டனாகவும் இருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் விவகாரத்தில் சில சிக்கல்கள் இருந்த போதிலும் கூட, ரோகித் சர்மா அதை எல்லாம் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் கொண்டு வரவில்லை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -