6,6,6.. 7 சிக்ஸர்கள்.. நீதான்யா இதுக்கு சரியான ஆளு.. சிவம் துபே அடிக்கு தல தோனி ரியாக்சன்

0
120
Shivam

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடக்கும் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்தப் போட்டியில் பன்னிரண்டாவது ஓவரில் களம் வந்த சிவம் துபே ஒட்டுமொத்தமாக ஆட்டத்தை மாற்றி இருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரகானே, டேரில் மிட்சல் மற்றும் ரவீந்திர ஜடேஜா மூன்று பேரும் பேட்டியில் ஏமாற்றம் தந்தார்கள். மூன்று பேர்கள் உடனும் இணைந்து கேப்டன் ருதுராஜ் சிறப்பாக விளையாடி தனி ஆளாக ரன் ரேட்டை காப்பாற்றி வந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் பன்னிரண்டாவது ஓவரில் ரவீந்திர ஜடேஜா ஆட்டம் இழந்து வெளியேற சிவம் துபே உள்ளே வந்தார். ஆட்டத்தின் 13 வது ஓவரை மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் வீச, அந்த ஓவரில் ஐந்தாவது பந்தில் தான் சிஎஸ்கே அணிக்கு முதல் சிக்சர் வந்தது. அந்த சிக்ஸரை சிவம் துபே அடித்தார்.

அங்கிருந்து அதிரடியை ஆரம்பித்த சிவம் துபே யாஸ் தாக்கூர் வீசிய ஒரு ஓவரில் தொடர்ந்து மூன்று சிக்ஸர்கள் பறக்க விட்டு அசத்தினார். 22 பந்தில் அரைசதம் அடித்த சிவம் துபே, மொத்தமாக 27 பந்துகளில் மூன்று பவுண்டரி மற்றும் 7 மெகா சிக்ஸர்கள் உடன் 66 ரன்கள் குவித்தார். இன்று ருதுராஜ் உடன் இணைந்து வெறும் 47 பந்தில் 14 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

சிஎஸ்கே நிர்வாகம் இன்றைய போட்டியில் சிவம் துபே இடத்தில் ரவீந்திர ஜடேஜாவையே அனுப்பியது. ஆனாலும் 12வது ஓவரில் விளையாட வாய்ப்பு கிடைத்தாலும், அங்கிருந்து 20 ஓவர்கள் முடிவதற்குள், 27 பந்துகளில் 66 ரன்கள் குவித்து ஆட்டத்தையே சிவம் துபே மொத்தமாக மாற்றி, கேப்டன் ருதுராஜின் ஆட்டத்திற்கு அர்த்தம் கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : 17 வருடம்.. தல தோனி செய்யாத சாதனை.. சிஎஸ்கே வரலாற்றில் ருதுராஜ் புது ரெக்கார்ட்

இன்றைய போட்டியில் அவர் பவுண்டரி அடித்து அரைசதத்தை நிறைவு செய்த பொழுது, அவருடைய ஷாட் செலக்சனுக்கு தல தோனி வியந்து “அருமையான பவர் ஹிட்டிங்” என்பது போலான ரியாக்சன் செய்தார். இன்றைய போட்டியில் ஒட்டுமொத்தமாக சிஎஸ்கே ரசிகர்களுக்கு என்ன தேவையோ எல்லாமே கிடைத்திருக்கிறது.