அப்பீல் கேட்காம 85 ரன்.. 18 சிக்ஸர்.. ஐபிஎல்-ல் புது சரித்திரம்.. கேகேஆர்-க்கு 272 ரன் வாரி கொடுத்த டெல்லி

0
14
IPL2024

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று 16ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணிகள் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தில் தற்பொழுது எதிர்த்து விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.

இந்த முறையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் இருவரும் துவக்கம் தரவந்து அதிரடியில் மிரட்டினார்கள். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 60 ரன்கள் எடுத்தது. பில் சால்ட் 12 பந்தில் 18 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து இன்று மும்பையை சேர்ந்த 18 வயதான இளம் வலதுகை பேட்ஸ்மேன் அங்கிரிஸ் ரகுவன்சி பேட்டிங் செய்ய வந்தார்.

- Advertisement -

இந்த ஜோடி டெல்லி பந்துவீச்சை மைதானம் எங்கும் சிதறடித்தது. ஒரு புறத்தில் சுனில் நரைன் தாறுமாறாக அடிக்க, அறிமுகவீரர் ரகுவன்சி சிறப்பான டச்சில் விளையாடி அதிரடியாக ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணி பவர் பிளேவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் குவித்தது. மேலும் 10 ஓவர்களுக்கு ஒரு விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் வந்தது.

சுனில் நரைன் அரைசதம் அடித்து தொடர்ந்து சிறப்பாக விளையாடி 39 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் உடன் 85 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவரது பேட்டில் பட்டு கேட்ச் பிடித்த ரிஷப் பேண்ட் ஆரம்பத்திலேயே அப்பீல் கேட்காத காரணத்தினால் 85 ரன்கள் கொடுக்க வேண்டியதாக அமைந்தது. இந்த ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது

இதற்கு அடுத்து இன்னொரு முனையில் மிகச் சிறப்பாக விளையாடிய அறிமுகவீரர் ரகுவன்சி அரைசதம் அடித்து 27 பந்தில் 5 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன், 200 ஸ்ட்ரைக் கிரேட்டில், 54 ரன்கள் எடுத்து அமர்க்களப்படுத்தினார். அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 18 (11), ரிங்கு சிங் 26 (8) ரன்கள் என அதிரடியாக விளையாடி வெளியேறினார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : நம்மால வாங்க முடியாதது மயங்க் யாதவ்கிட்ட இருக்கு.. அவர் அசத்தறதுல ஆச்சரியம் இல்ல – ரபாடா பேட்டி

இதற்கு அடுத்து ரசல் வழக்கம்போல 19 பந்தில் 4 பவுண்டரி மூன்று சிக்ஸர்களுடன் 41 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 272 ரன்கள் குவித்தது. இஷாந்த் சர்மா 3 ஓவர்களுக்கு 43 ரன்கள் தந்து இரண்டு விக்கெட் கைப்பற்றினார். எட்டு நாட்களுக்கு முன்பு நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிராக ஹைதராபாத் 277 ரன்கள் குவித்து சாதனை படைத்திருந்தது. தற்பொழுது கொல்கத்தா 272 ரன்கள் குவித்திருக்கிறது. ஒரு ஐபிஎல் தொடரில் இரண்டு முறை 270 ரன்கள் மேல் எட்டுவது இதுவே முதல் முறை. மேலும் கொல்கத்தா இந்த போட்டியில் 18 சிக்ஸர்கள் அடித்திருக்கிறது.