நம்மால வாங்க முடியாதது மயங்க் யாதவ்கிட்ட இருக்கு.. அவர் அசத்தறதுல ஆச்சரியம் இல்ல – ரபாடா பேட்டி

0
231
Mayank

நடப்பு ஐபிஎல் சீசனில் லக்னோ அணிக்காக விளையாடும் 21 வயதான டெல்லியை சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் மிகப்பெரிய பேசுபொருளாக மாறி வருகிறார். அவர் குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வந்த நிலையில், தற்பொழுது வேகப்பந்து வீச்சில் இளம் வயதில் நிறைய சாதனைகள் படைத்த தென் ஆப்பிரிக்காவின் ககிசோ ரபாடாவும் பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் முதன்முறையாக பஞ்சாப் அணிக்கு எதிராக களம் இறங்கிய மயங்க் யாதவ், அந்தப் போட்டியில் நான்கு ஓவர்களில் 27 ரன்கள் தந்து மூன்று விக்கெட் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். மேலும் அந்தப் போட்டியில் 155.8 கிலோமீட்டர் வேகத்தில் வந்து வீசி இருந்தார். இதற்கு அடுத்து ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியிலும் நான்கு ஓவர்களில் 14 ரன்கள் தந்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை மீண்டும் வென்றார். இந்த போட்டியில் மணிக்கு 156.6 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி அசத்தினார்.

- Advertisement -

தொடர்ந்து இரண்டு போட்டிகளிலும் வேகத்தில் மிரட்டுவதோடு, விக்கெட்டுகளையும் கைப்பற்றி, ஐபிஎல் வரலாற்றில் முதல் இரண்டு போட்டிகளில் ஆட்டநாயகன் விருதை வென்ற முதல் வீரர் என்கின்ற சாதனையையும் படைத்தது, நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை இந்திய அணியில் இடம் பெறுவாரா? என்கின்ற எதிர்பார்ப்பையும் ஏகத்துக்கும் உருவாக்கி இருக்கிறார்.

இவருடைய வேகத்தை தாண்டி, கட்டுப்பாடு மற்றும் துல்லியம் சிறந்த முறையில் இருப்பதால்தான், இவரை எல்லோரும் விதிவிலக்கான ஆச்சரியமான பந்துவீச்சாளராக பார்க்கிறார்கள். இதன் காரணமாகவே இவருக்கு விக்கெட்டுகளும் கிடைக்கிறது. இதனால் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் காத்திருப்பதாக கருதப்படுகிறது.

இதுகுறித்து ரபாடா கூறும்பொழுது “உங்களால் வாங்க முடியாத ஒன்று அவரிடம் இருக்கிறது. அதுதான் வேகம். அதைத்தான் அவர் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்கிறார். அவர் என்ன லென்த்தில் பந்தை அடிக்க வேண்டும் என்ற தெளிவு பெற்று இருக்கிறார். எனவே பேட்ஸ்மேன்களுக்கு அவர் என்ன செய்யப் போகிறார் என்பது தெரியும். மேலும் அவரால் பந்தை எங்கு வீச வேண்டுமோ அங்கு வீச முடிந்த கட்டுப்பாட்டை வைத்திருக்கிறார். வேகமும் இத்துடன் கிடைத்திருக்கிறது. ஆக இது இரண்டும் சேர்ந்த பின்னால் அவர் சிறப்பாக செயல்படுவது ஆச்சரியம் இல்லை.

- Advertisement -

இதையும் படிங்க : சிஎஸ்கே ஐபிஎல் ஏலத்துல என்னை வாங்கும்னு நம்பினேன்.. ஆனா கடைசியில உடைஞ்சிட்டேன் – மயங்க் யாதவ் பேட்டி

தற்பொழுது ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டிக்கும் என்னை தயார்படுத்தி விளையாடுவதுதான் முக்கிய நோக்கம். டி20 உலகக்கோப்பை தென் ஆப்பிரிக்க அணிக்கு தேர்வு செய்யப்பட்டால் மகிழ்ச்சி. ஐபிஎல் செயல்படுவதும் அதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கும். அதே சமயத்தில் தற்போது என்னுடைய நோக்கம் பஞ்சாப் அணிக்காக விளையாடி போட்டிகளை வெல்ல வேண்டும் என்பதுதான்” என்று கூறி இருக்கிறார்.