ஹர்திக் 6 வாரத்துல இந்தியாவுக்காக விளையாட போறாரு.. இப்படி மோசமா பேசாதிங்க – பொல்லார்டு வேதனை

0
774
Hardik

நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஹர்திக் பாண்டியா கேப்டன்சி பவுலிங் பேட்டிங் என தொடர்ந்து நேற்றைய போட்டிக்கு விமர்சனம் செய்யப்படுகிறார். இதுகுறித்து அணியின் பயிற்சியாளர் கீரன் பொல்லார்டு வேதனை தெரிவித்திருக்கிறார்.

நேற்றைய போட்டியில் சிவம் துபே பேட்டிங் வந்ததும் சுழல் பந்துவீச்சாளர்களை ஹர்திக் பாண்டியா பயன்படுத்தவில்லை. இதன் காரணமாக தான் பந்து வீச வேண்டிய கட்டாய சூழ்நிலையில் இருந்தார். பும்ராவின் இரண்டாவது ஓவரை எட்டாவது ஓவராகவே பயன்படுத்தி விட்டார். மேலும் பேட்டிங்கில் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

முதல் மூன்று போட்டிகளில் தோற்று அடுத்த இரண்டு போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றதும், அந்த அணியில் ஹர்திக் பாண்டியா மீது ரசிகர்கள் கொண்டிருந்த விமர்சனங்கள் குறைய ஆரம்பித்தது. ஆனால் தற்போது மீண்டும் தோல்வியின் காரணமாக விமர்சனங்கள் அதிகரித்திருக்கிறது. தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அவரை ரசிகர்கள் முன்னிறுத்துகிறார்கள்.

இதைவிட மிக முக்கியமாக ஹர்திக் பாண்டியா போட்டியின் தோல்விக்கு பின்னால் பேசும்பொழுது மகேந்திர சிங் தோனியை மிகவும் புகழ்ந்து பேசி விட்டார். ரோகித் சர்மா குறித்து பெரிதாக எதுவும் பேசவில்லை. இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மிகக் கடுமையாக ஹர்திக் பாண்டியாவை விமர்சித்து வருகிறார்கள்.

இதுகுறித்து பேசி இருக்கும் கீரன் பொல்லார்டு கூறும் பொழுது ” ஹர்திக் பாண்டியா பற்றிய விமர்சனங்கள் அவரை பாதிக்குமா? என்று எனக்குத் தெரியாது. அவர் மிகவும் தன்னம்பிக்கை கொண்ட ஒரு மனிதர். கிரிக்கெட்டில் நல்ல நாட்களும் இருக்கும் கெட்ட நாட்களும் இருக்கும். அவர் எல்லா விதத்திலும் தன்னை மேம்படுத்திக் கொள்வதற்கு மிகக் கடினமாக உழைக்கக் கூடியவர்.

- Advertisement -

இதையும் படிங்க : சுயநலம் இல்லாத மனுஷன்.. 100 அடிச்சதும் இத கவனிச்சிங்களா – ரோகித் சர்மாவுக்கு பிரெட் லீ பாராட்டு

நான் தற்பொழுது உடல்நலம் இல்லாமல் களைப்பாக இருக்கிறேன். மேலும் தோல்விக்கு ஒரு தனி நபரை காரணம் கூறுவது இதையெல்லாம் அதிகரிக்கிறது. நாள் முடிவில் கிரிக்கெட் என்பது ஒரு அணி விளையாட்டு. ஆறு வாரங்களில் உங்கள் நாட்டை பிரதிநிதித்துவப் படுத்தப் போகும் ஒரு வீரரை நீங்கள் இப்படி செய்வது சரியல்ல. அனைவரும் அவரை உற்சாகப்படுத்தவும் அவர் சிறப்பாக செயல்படவும் விரும்புகிறோம். அவர் ஒரு எக்ஸ்பேக்டர். அவர் சிறந்து விளங்கும் பொழுது அவர் புகழ் பாடுவதை நான் திரும்பி வந்து பார்ப்பேன் என்று என் இதயத்தில் ஆழமாக நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.