சுயநலம் இல்லாத மனுஷன்.. 100 அடிச்சதும் இத கவனிச்சிங்களா – ரோகித் சர்மாவுக்கு பிரெட் லீ பாராட்டு

0
1042

நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி தோல்வியே அடைந்திருந்தாலும் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவை ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் பிரட்லீ பாராட்டி இருக்கிறார்.

மும்பை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இருபது ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது. சென்னை அணியின் கேப்டன் ருத்ராஜ் சிறப்பாக விளையாடி 40 பந்துகளில் 69 ரன்களும், ஆல் ரவுண்டர் சிவம் தூபே 38 பந்துகளில் 66 ரன்களும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் கடைசி ஓவரில் களமிறங்கி மூன்று சிக்ஸர்களை விளாசி நான்கு பந்துகளில் 20 ரன்கள் குவித்தார் மகேந்திர சிங் தோனி. இதனால் சென்னை அணி 20 ஓவர்களில் 206 ரன்களைக் குவித்தது. பின்னர் மும்பை அணிக்கு இந்த இலக்கு சற்று எளிதாகவே தோன்றியது.

மும்பை அணி அதற்கு தகுந்தாற் போலவே சிறப்பான அடித்தளத்தை அமைத்து, வெற்றி பெறும் வகையிலேயே விளையாடியது. ஏழு ஓவர்களுக்கு 70 ரன்கள் குவித்த நிலையில், அணியின் தொடக்க ஆட்டக்காரர் இசான் கிசான் ஆட்டம் இழந்தார். அதற்குப் பிறகு வந்த வீரர்கள் சென்னை அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ரன்கள் குவிக்க தடுமாறினார். இதில் ஒரு முனையில் ரோகித் சர்மா மட்டும் நின்று அபாரமாக விளையாடிக் கொண்டிருந்தார்.

அவருக்கு கை கொடுத்து யாரும் சிறப்பாக விளையாடாததால் மும்பை அணியால் 20 ஓவர்களில் 186 ரன்களே குவிக்க முடிந்தது. ரோஹித் சர்மா 63 பந்துகளை எதிர் கொண்டு 11 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என 113 ரன்கள் விளாசினார். இருப்பினும் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இருப்பினும் ரோகித் சர்மா அடித்த சதம் அவருக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை.

- Advertisement -

ரோகித் சர்மாவுக்கு பிரெட் லீ பாராட்டு

சதம் அடித்தும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தாமல் இருந்தார். எனவே இதுகுறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ப்ரட்லி கூறும் பொழுது “ரோகித் சர்மாவின் ஆட்டம் அபாரமானதாக இருந்தது. அவர் சூழ்நிலையை விட்டு வெளியே சென்று ஆடிய விதம் அற்புதமாக இருந்தது. அவர் சதம் அடித்த போது கூட பேட்டை உயர்த்திக் காட்ட வில்லை. அணியின் வெற்றி என்பது அவரது தனிப்பட்ட மைல்கல்லை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை காட்டுகிறது.

அவர் முதல் பந்தில் இருந்து வெற்றி பெறும் எண்ணத்துடனே விளையாடினார். அவர் மைதானத்தில் எல்லா திசைகளிலும் பௌண்டரிகளை விளாசினார். ஆனால் அவரால் வெற்றி பெற வைக்க முடியவில்லை. 63 பந்துகளில் 11 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 113 ரன்கள் குவித்தார். ஆனால் துரதிஷ்டவசமாக உங்களால் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:ஆர்சிபி மும்பை ஆடிய அதே பிட்ச்.. ரோகித் சர்மாவுக்கு நான் இப்படித்தான் பிளான் பண்ணேன் – சர்துல் தாக்கூர் பேட்டி

இதன் மூலம் ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்து இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. தற்போது மும்பை அணி புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் வகிக்கிறது குறிப்பிடத்தக்கது.