கோலி ஆர்சிபியை விட்டு உடனே கிளம்புங்க.. நான் சொல்ற இந்த டீம்ல சேருங்க – கெவின் பீட்டர்சன் அதிரடி பேட்டி

0
754

நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான முதல் எலிமினேட்டர் போட்டியில் பெங்களூர் அணி பரிதாபமாக 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

தொடர்ச்சியாக ஆறு வெற்றிகளை பெற்ற நிலையில் இந்த முறையாவது ஆர்சிபி கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்த்த நிலையில், மீண்டும் ஒரு தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறுகிறது. இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன் விராட் கோலி ஆர்சிபியை விட்டு வெளியேறி இந்த அணியில் இணைய நேரம் வந்துவிட்டது என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

தோல்விப் பாதையில் இருந்த ராஜஸ்தான் அணியும், வெற்றிப் பாதையில் தொடர்ந்து வந்து கொண்டிருந்த பெங்களூர் அணியும் சந்தித்த எலிமினேட்டர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி ராஜஸ்தான் அணியின் அபாரமான பந்துவீச்சில் எட்டு விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 172 ரன்கள் மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக பட்டிதார் 34 ரன்கள் குவித்தார்.

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய ராஜஸ்தான் அணியில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தின் மூலம், ராஜஸ்தான் அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இந்தத் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 700 ரன்களுக்கு மேல் குவித்து தனிநபர் ரன்கள் குவித்தவர்களின் வரிசையில் முதலிடத்தில் இருந்தாலும், ஐபிஎல் கோப்பை இல்லாமல் வெறும் கையுடன் திரும்ப வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

கெவின் பீட்டர்சன் கோரிக்கை

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன் கால்பந்து வீரர்களை மேற்கோள்காட்டி, விராட் கோலி ஐபிஎல் கோப்பையை வெல்ல தகுதியானவர் என்றும் அவர் தன் கனவை நிறைவேற்ற டெல்லி அணியில் இணைய வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இது குறித்து பீட்டர்சன் விரிவாக கூறும்பொழுது
“நான் இதுகுறித்து முன்பே கூறியிருக்கிறேன், இப்போதும் கூறுகிறேன். மற்ற விளையாட்டுக்களின் ஜாம்பவான்கள் தங்கள் கனவை நிறைவேற்ற அந்தக் கிளப்பிலிருந்து வேறு கிளப் அணிகளுக்கு இடம் மாறுவார்கள்.

- Advertisement -

விராட் கோலி கடுமையாக உழைக்கிறார், கடுமையாக முயற்சித்து மீண்டும் ஆரஞ்சு கோப்பையை வென்றுள்ளார். ஆனால் பெங்களூர் அணி இந்த முறையும் தோல்வியடைந்துள்ளது. விராட் கோலி ஆர்சிபி அணியின் பிராண்ட் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் விராட் கோலி ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு தகுதியான நபர். அந்தக் கோப்பையை பெற விளையாடும் அணியில் விராட் கோலி விளையாடுவதற்கு தகுதியான நபர்.

இதையும் படிங்க :சுயமரியாதைக்கு ஆடினேன்.. நடந்ததை நினைச்சு பெருமைதான் படுறேன்.. வருத்தமில்லை – விராட் கோலி பேட்டி

அது உண்மையில் டெல்லி அணியாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் விராட் கோலியின் சொந்த மாநிலம் டெல்லி. அங்கு அவருக்கு ஒரு வீடு உள்ளது என்பது எனக்குத் தெரியும். அவருக்கு ஒரு இளம் குடும்பம் உள்ளது. எனவே விராட் கோலி பெரும்பாலான நேரங்களில் தனது வீட்டில் இருக்க முடியும். விராட் கோலி நீண்டதாக யோசித்த நேரம் இது என்று நான் நினைக்கிறேன். இது ஒன்றும் புதிது கிடையாது. கால்பந்து தொடரில் சூப்பர் ஸ்டார்களான மெஸ்ஸி, ரொனால்டோ, பெக்காம், ஆகியோரும் வெளியேறி இருக்கிறார்கள். ஹரிகேன் ஸ்பர்ஸ் அணியை விட்டுவிட்டு பேயர்ன் முனிச் அணிக்காக விளையாடி உள்ளார்” என்று கூறியிருக்கிறார்.