சுயமரியாதைக்கு ஆடினேன்.. நடந்ததை நினைச்சு பெருமைதான் படுறேன்.. வருத்தமில்லை – விராட் கோலி பேட்டி

0
613
Virat

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி மீண்டு வந்த விதம் எப்பொழுதும் ரசிகர்களால் நினைவு வைக்கப்படும் அளவில் இருக்கிறது. இந்த நிலையில் பிளே ஆப் சுற்றில் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து ஆர்சிபி அணி வெளியேறியது. இந்த ஆண்டு ஐபிஎல் பயணம் குறித்து விராட் கோலி மனம் திறந்து பேசி இருக்கிறார்.

ஆர்சிபி அணிக்கு இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பத்தில் சிறப்பான ஒன்றாக அமையவில்லை. அவர்கள் தாங்கள் விளையாடிய முதல் எட்டு போட்டிகளில் 7 போட்டிகளில் தோல்வி அடைந்தார்கள். எனவே அவர்களுக்கு பிளே ஆப் வாய்ப்பு என்பது ஒரு சதவீதம் மட்டும் தான் இருந்தது. மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை சார்ந்து அவர்கள் விளையாட வேண்டி இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் சிறப்பாக திரும்பி வந்து ஐந்து போட்டிகளில் ஐந்து போட்டிகளையும் வென்றார்கள். இறுதியாக 18 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வென்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி என்ற நிலையில், அதையும் சிறப்பாக செய்து வெற்றி பெற்று அசத்தலாக பிளே ஆப் சுற்றுக்கு வந்தார்கள். தற்பொழுது கோப்பையை வெல்லலாம் என்று கருதப்பட்ட அவர்கள் வெளியேறி ஏமாற்றத்தை மீண்டும் கொடுத்து இருக்கிறார்கள்.

இதுகுறித்து ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கூறும் பொழுது “சீசனின் முதல் பாதியில் எங்களுடைய செயல் திறன் மிகவும் குறைவாக இருந்தது. கிரிக்கெட் வீரர்களாக நாங்கள் கொண்டிருக்கும் தரத்திற்கு ஏற்றபடி விளையாடவில்லை. ஆனால் பின்னர் நாங்கள் எங்களுடைய திறமையை வெளிப்படுத்த ஆரம்பித்தோம். எங்களின் சுயமரியாதைக்காக விளையாட ஆரம்பித்தோம். நம்பிக்கைமீண்டும் வந்தது.

நாங்கள் மீண்டு வந்து விஷயங்களை மாற்றி அமைத்து வென்ற விதம் மிகவும் சிறப்பானது. இதை நான் நேசிக்கிறேன் எப்பொழுதும் நினைவில் இருக்கும். ஏனென்றால் இது அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரர்களின் கேரக்டரையும் வெளிப்படுத்தியது. இறுதியில் விளையாடிய விதம் பெருமைப்படக்கூடிய ஒன்று.

- Advertisement -

இதையும் படிங்க : புதிய பயிற்சியாளர் பதவிக்கு அணுகிய பிசிசிஐ.. உண்மையை உடைத்த ரிக்கி பாண்டிங்.. அவரே வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

ரசிகர்களின் ஆதரவு அசைக்க முடியாமல் இருந்தது. இதற்கு நாங்கள் எப்பொழுதும் நன்றி உடையவர்களாக இருப்போம். பெங்களூரில் மட்டும் இல்லாமல் அவர்கள் நாங்கள் செல்லும் எல்லா இடங்களுக்கும் வந்து எங்களை ஆதரித்தார்கள். உங்கள் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் மிக மிக நன்றி!” எனக் கூறியிருக்கிறார்.