“என்னா ஆட்டம் போட்டிங்க.. இப்ப அனுபவிங்க.. கைய குடுங்க பிசிசிஐ” – கபில்தேவ் பாராட்டு

0
750
Kapil

இந்திய கிரிக்கெட்டில் மிக அதிகபட்சமான உச்சநிலையை எட்டி ரசிகர்களை வைத்திருந்தவராக சச்சின் டெண்டுல்கர் இருக்கிறார். மிகப்பெரிய புகழை கிரிக்கெட்டில் எட்டியவரும் அவராகவே இருக்கிறார்.

அவர் தன்னுடைய கடைசி சர்வதேச போட்டிக்கு முன்பாக, தன்னை தயார்படுத்திக் கொள்ளும் விதமாக தன் மாநில அணியான மும்பை அணிக்கு உள்நாட்டு கிரிக்கெட் விளையாடி, தன் கடைசி போட்டிக்கு வந்தார்.

- Advertisement -

அவர் தன்னுடைய 24 வருட கிரிக்கெட் வாழ்வில் காயத்தால் பாதிக்கப்படும் பொழுது, அதிலிருந்து மீண்டதும் நேராக உள்நாட்டு கிரிக்கெட் விளையாடி, அதைப் பயிற்சியாக பெற்றுக்கொண்டுதான் சர்வதேச கிரிக்கெட் விளையாடுவதற்கு வருவார்.

இந்தியாவில் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, வீரர்களை தேர்வு செய்வதற்கான களமாக உள்நாட்டு கிரிக்கெட் இருந்து வந்தது.ஆனால் ஐபிஎல் தொடருக்கு முக்கியத்துவம் கிடைத்த பிறகு, அதிலிருந்து வீரர்களை தேர்வு செய்ய ஆரம்பித்த பிறகு, இந்திய அணிக்கு தேர்வான வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட் விளையாடுவதை முழுவதுமாக நிறுத்தி விட்டார்கள்.

- Advertisement -

இதன் காரணமாக சுழல் பந்துவீச்சை எதிர்த்து சிறப்பாக விளையாடும் இயல்பான திறனை இந்திய பேட்ஸ்மேன்கள் இழந்தார்கள். இன்னொரு புறம் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடும் இந்திய வீரர்களால் உள்நாட்டுப் போட்டிகளில் ஓய்வு நேரங்களில் விளையாட முடிவதில்லை. ஆனால் இப்படியான வீரர்கள் குறித்து பிசிசிஐ எதுவும் கண்டிப்பு செய்யவில்லை.

தற்பொழுது பிசிசிஐ கூறியுள்ளது என்னவென்றால், காயம் எதுவும் இல்லாமலும், இந்திய அணிக்கு தேர்வாகாமலும் இருக்கும் எல்லா வீரர்களும் தங்கள் மாநில அணிக்காக உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் கட்டாயம் விளையாட வேண்டும் என்றுதான் கூறியிருக்கிறது. இப்படி செயல்படாத ஸ்ரேயாஸ் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் மீது நடவடிக்கையும் எடுத்திருக்கிறது.

இதுகுறித்து இந்திய லெஜெண்ட் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறும் பொழுது ” இப்படி உள்நாட்டு கிரிக்கெட் விளையாடும் பொழுது சில நேரங்களில் முக்கியமான வீரர்கள் காயம் கூட அடைவார்கள்தான். ஆனாலும் நீங்க விளையாட்டை விட யாரும் பெரியவர்கள் கிடையாது என்பதால், இந்த நடவடிக்கை சரியான ஒன்று.

உள்நாட்டு கிரிக்கெட்டை பாதுகாப்பதற்காக சரியான நடவடிக்கையை எடுத்துள்ள பிசிசிஐக்கு எனது பாராட்டுகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன். சர்வதேச கிரிக்கெட்டில் பிரபலமடைந்ததும் உள்நாட்டு கிரிக்கெட்டை வீரர்கள் புறக்கணிப்பதை பார்த்து நான் மிகவும் வருத்தம் அடைந்து இருக்கிறேன்.

இதையும் படிங்க : உலக கோப்பையை ஜெயிச்சவன் சொல்றேன்.. டீமை விட நீங்க பெருசு கிடையாது.. ஸ்ரேயாஸ் இஷான் மீது விமர்சனம்

சர்வதேச வீரர்கள் தங்களுடைய மாநில அணிக்கு விளையாடுவதை நான் எப்பொழுதும் ஆதரிக்கிறேன். இது உள்நாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு பெரிய நம்பிக்கையை கொடுக்கும். மேலும் மாநில கிரிக்கெட் சங்கம் வீரர்களுக்கு செய்த சேவைகளுக்கு, அந்த வீரர்கள் திருப்பி செலுத்துவதற்கு சரியான முறை இதுதான்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -