உலக கோப்பையை ஜெயிச்சவன் சொல்றேன்.. டீமை விட நீங்க பெருசு கிடையாது.. ஸ்ரேயாஸ் இஷான் மீது விமர்சனம்

0
466
Shreyas

உலக அளவில் ஐபிஎல் தொடர் விளையாடுவது ஒவ்வொரு வீரர்களுக்கும் கனவாக மாறி வருகிறது. உலக கிரிக்கெட் நாடுகளில் சிறப்பாக செயல்படும் வீரர்கள், அடுத்து ஐபிஎல் தொடர் மூலம் வருடத்தில் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்றுதான் நினைக்கிறார்கள்.

மேலும் சராசரியான செயல்பாட்டை வெளிப்படுத்தும் வீரர்களும் தங்கள் எப்படியாவது ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியாலாவது வாங்கப்பட மாட்டோமா என்று எதிர்பார்க்கிறார்கள். இதை நோக்கி செயல்படக்கூடிய வீரர்களும் இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் இடையே மிக அதிகமாக பரவி இருக்கிறது. இதன் காரணமாக உள்நாட்டு கிரிக்கெட்டை தவிர்த்து வருகிறார்கள்.

கடைசியில் இஷான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இப்படி உள்நாட்டு கிரிக்கெட் விளையாடாமல் ஐபிஎல் தொடருக்காக தயாரானது பிசிசிஐயை கோபப்படுத்தியது. இதன் காரணமாக அவர்கள் சம்பள பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார்கள்.

இதுகுறித்து 1983ஆம் ஆண்டு முதல் முறை உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்று இருந்த மதன்லால் கூறும் பொழுது ” பிசிசிஐ உள்நாட்டு கிரிக்கெட் விளையாடச் சொன்னால் போய் விளையாடு இருக்க வேண்டும். இங்கு விளையாட்டை விட யாரும் பெரிய ஆள் கிடையாது. இந்த மாதிரி செயல்பட்டதற்கு பிசிசிஐயை பாராட்ட வேண்டும். இப்போதெல்லாம் ஐபிஎல் தொடர் காரணமாக உள்நாட்டு கிரிக்கெட்டை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள்.

- Advertisement -

ஆனால் பிசிசிஐ ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் உள்நாட்டு கிரிக்கெட் விளையாடுவதை கட்டாயம் ஆக்கி இருக்கிறது. நீங்கள் அந்த விதிகளை பின்பற்றவில்லை என்றால் அதற்கான விளைவுகளை சந்திக்கத்தான் வேண்டும். இப்படியான நடவடிக்கைகள் அடுத்து வரக்கூடியவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும்.

இதையும் படிங்க : “எழுதி வச்சுக்கோங்க.. ரோகித் டிராவிட் ரஜத் பட்டிதாருக்கு இதை செய்ய போறாங்க” – ஏபி டிவில்லியர்ஸ் உறுதி

இஷான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இல்லை என்றால் கூட சர்பராஸ் கான், துருவ் ஜுரல் போன்ற இளம்வீரர்கள் சிறப்பாக வருகிறார்கள். இதனால் இந்திய அணியின் பெஞ்ச் பலம் சிறப்பாக இருக்கிறது. பிசிசிஐ தங்களுடைய வீரர்கள் திறமையாக இருப்பது மட்டுமில்லாமல் ஒழுக்கமாக இருப்பதையும் உறுதி செய்கிறது அவ்வளவுதான்” என்று கூறியிருக்கிறார்