தற்பொழுது கிரிக்கெட்டில் டி20 கிரிக்கெட் வடிவம் ஆதிக்க செலுத்தக்கூடிய வடிவமாக மாறி வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் கிரிக்கெட் வடிவங்களுக்கு பெரிய அளவில் ரசிகர்களிடமிருந்து ஆதரவு கிடைப்பதில்லை. இதன் காரணமாக பெரிய கிரிக்கெட் நாடுகள் அனைத்தும் தனியாக பிரான்சிசசைஸ் டி20 லீக்குகள் நடத்தி வருகின்றன. டி20 கிரிக்கெட்டில் யாரால் இரட்டை சதம் அடிக்க முடியும்? என நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியிருக்கிறார்.
இந்தியாவில் தற்பொழுது நடைபெற்று வரும் 17 வது ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 277 ரன்கள் எடுத்து, ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரன்களை பதிவு செய்தது. இந்த சாதனையை உடனடியாக முறியடிக்கும் வாய்ப்பில் வந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 272 ரன்கள் எடுத்தது.
மீண்டும் சில நாட்களுக்கு முன்பு பெங்களூர் மைதானத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக மீண்டும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 287 ரன்கள் குவித்து, தங்களுடைய ஐபிஎல் அதிகபட்ச ரன் சாதனையை தாங்களே முறியடித்தார்கள். நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய அளவில் சாதகத்தை உண்டு செய்வதாக இருக்கிறது.
இதன் காரணமாக பந்துவீச்சாளர்கள் என்ன செய்வது? என தெரியாமல் திண்டாடி வருகிறார்கள். பேட்ஸ்மேன்கள் ஒரு பக்கத்தில் பெரிய அளவில் ரன் குவித்து வருகிறார்கள். தற்பொழுது 200 ஸ்ட்ரைக் ரேட்டில் அடிக்கப்படும் சதங்களுக்கு கூட பெரிய அளவில் வரவேற்பு இருப்பதில்லை. பேட்ஸ்மேன் இன்னும் அதிரடியாக விளையாட வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இந்த நிலையில் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிரீஸ் கெயில் புனே அணிக்கு எதிராக 66 பந்துகளில் 175* ரன்கள் குவித்தது அதிகபட்ச ரன்னாக இருந்து வருகிறது. இன்னும் டி20 கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதம் அடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இது குறித்து கேன் வில்லியம்சன் தன்னுடைய கருத்தை கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க : சிவம் துபே டி20 உ.கோ இந்திய அணியில் செலக்ட்டாக.. இந்த ஒரே பிரச்சனை மட்டும்தான் இருக்கு – ஏபி.டிவில்லியர்ஸ் கருத்து
இன்றைய டி20 கிரிக்கெட் காலகட்டத்தில் இந்தியாவின் சூரியகுமார் யாதவ், தென் ஆப்பிரிக்காவின் ஹென்றி கிளாசன், இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் ஆகியோர் மிகவும் அதிரடியான பேட்ஸ்மேன்களாக இருக்கிறார்கள். ஆனால் கேன் வில்லியம்சன் இந்திய கேப்டன் ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதத்தை அடிக்கக் கூடியவராக இருப்பார் என கூறியிருக்கிறார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் மூன்று இரட்டை சதங்கள் அடித்து இருப்பதன் மூலம், அவருக்கு வெள்ளை பந்து கிரிக்கெட் வடிவத்தில் இரட்டை சதம் அடிப்பது தொடர்பாக மற்றவர்களை விட நன்றாக தெரியும் எனவும் கூறியிருக்கிறார்.